/* */

நெல் கொள்முதல்நிலையம்: கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல்நிலையம்:  கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை
X

திருவாரூர் அருகே பெரும்புகளூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள நெல்கொள்முதல் கட்டுமானப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. 3 போகம் நெல் சாகுபடி நடைபெற்று வந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினையால் குறுவை, சம்பாசாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆழ்குழாய் வசதி உள்ள ஒரு சில இடங்களில் மட்டுமே கோடை சாகுபடி நடைபெறுகிறது. விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய பருவ நேரத்தில் சுமார் 480 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடைபெறுகிறது. இதனால் கடந்த பருவத்தில் 6 லட்சத்து 38 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலானவை வாடகை இடங்களில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களாக செயல்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் இன்றி நெல் கொள்முதல் நடைபெறும் நிலையில் உடனடியாக சேமிப்பு கிடங்கிற்கு நகர்வு செய்யப்படுவதில்லை.

திருவாரூர் அருகே பெரும்புகளுர் பகுதியில் விவசாயம் அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் நீண்டகாலமாக வாடகை இடத்தில் திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நிரந்த கட்டிடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கடந்த ஆண்டு பெரும்புகளூரில் இருந்து வண்டாம்பாளை செல்லும் வழியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் நிலையம் கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. கட்டுமான பணிகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் பவித்திரமாணிக்கம், பெரும்புகளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் அதிகமாக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் நெல்லை காய வைக்கவும், நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாக்கவும் நிரந்தர கட்டடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். கடந்த ஆண்டு இடம் தேர்வு செய்யப்பட்டு நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கியது. தற்போது இந்தப் பணிகள் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளது. கட்டுமான பணிகள் பாதியில் நிற்பதால் செடி, கொடிகள் மண்டி வருகிறது. எனவே நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டும் பணிகளை விரைவுப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அப்பகுதி விவசாயிகள் கூறினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? கட்டடம் கட்டும் பணி நடக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Updated On: 21 April 2021 7:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’