/* */

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய திருவாரூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முன்வரவேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவாரூர் கலெக்டர் கூறினார்.

HIGHLIGHTS

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய திருவாரூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
X

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

அக்டோபர்-2021-ஆம் மாதத்திற்கான திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் 2020ம் ஆண்டு சம்பா பருவத்தில் சுமார் 1,27,881 விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு 1,42,230 ஹெக்டேர் சம்பா நெற்பரப்பு காப்பீடு செய்யப்பட்டது. இதுவரை 1,09,538 விவசாயிகளுக்கு ரூ.285 கோடியே 22 இலட்சத்து 20 ஆயிரம் காப்பீடு நிறுவனங்களிலிருந்து இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரினை பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களும் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடி நெல்லினை காப்பீடு செய்ய கடைசி நாள் 15.11.2021 ஆகும். ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 பிரிமீயம் செலுத்த வேண்டும். எனவே, சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் சம்பா, தாளடி நெல் பயிரினை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதை பயிர் காப்பீட்டுக்கட்டணம் செலுத்திய இடத்தில் பெற்றுக்கொள்ளலாம். எனவே, விவசாயிங்கள் இறுதி நேரம் வரை பிரிமியம் செலுத்த காத்திருப்பதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகையினை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Oct 2021 1:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...