/* */

திருவாரூரில் பப்ளிக் போலீஸ் இந்தியா அமைப்பின் கிளை தொடக்கம்

இந்தியாவில் அமைதியான சூழ்நிலை, பொருளாதார வளர்ச்சிக்கு சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று அர்த்தம்

HIGHLIGHTS

திருவாரூரில் பப்ளிக் போலீஸ் இந்தியா அமைப்பின் கிளை தொடக்கம்
X

திருவாரூரில் நடைபெற்ற பப்ளிக் போலீஸ் இந்தியா அமைப்பின் கிளை தொடக்க விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் மற்றும் கிளை நிர்வாகிகள்

திருவாரூரில் பப்ளிக் போலீஸ் இந்தியா அமைப்பின் கிளை துவக்க விழா நடைபெற்றது.

திருவாரூர் தனியார் ஹோட்டலில் பப்ளிக் போலீஸ் இந்தியா என்ற அமைப்பின் திருவாரூர் கிளை துவக்க விழா தமிழக தலைவர் மருத்துவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான எஸ். பாஸ்கரன் பங்கேற்று கிளையைத் தொடங்கி வைத்து பேசியதாவது: வரலாற்று புத்தகத்தை திருப்பி பார்த்தல் எங்கெல்லாம் சட்டத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறதோ அந்த நாடுகளெல்லாம் அமைதியான சூழ்நிலையிலேயே இருக்கின்றன. 2 நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் உள்ள நிலையை பார்த்தோம். இந்தியாவோடு சுதந்திரம் அடைந்த நாடுகள் எல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ புரட்சிகளையும், அரசியல் மாற்றங்களையும், அமைதியின்மையையும் பார்த்துள்ளது .

ஆனால், இந்தியாவிலேயே தொடர்ந்து அமைதியான சூழ்நிலை, பொருளாதார ரீதியாக வளர்ச்சி. இதையெல்லாம் பார்க்கும் போது இங்கே சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். சட்டத்தின் ஆட்சியை சிறப்பு செய்வதற்காகவே இதுபோன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. விதிமீறல்கள் இருக்கும். அது இல்லை என்று கூற முடியாது. ஏனென்றால் இது ஒரு பெரிய நாடு. பெரிய அமைப்புகள் இருக்கிற தேசம். எனவே ஆங்காங்கே விதிமீறல்கள் இருக்கும். அனைவரும் ஒருவர் போல் இருக்க மாட்டார்கள். காவல்துறையை எடுத்துக்கொண்டால், சாத்தான்குளம் நிழலாடுகிறது. இதைப் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பொழுது, அங்கே இழந்த உரிமையை அல்லது மீறப்பட்ட உரிமையை கேட்பதற்கு மனித உரிமை ஆணையம் இருக்கிறது. இருப்பினும் அந்த இடத்தில் உடனடியாக நிவாரணம் அளிப்பதற்கு, இதுபோன்ற அமைப்புகள் தேவைப்படுகிறது என்றார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான எஸ். பாஸ்கரன்.

நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் மருத்துவர் செந்தில் , தியாகபாரி , பொருளாளர் ஸ்ரீதரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Updated On: 20 Aug 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  4. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  5. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  7. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  10. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்