/* */

திருவாரூர்: நகர்ப்புற தேர்தலில் போட்டியிடுவோரிடம் அ.தி.மு.க. விருப்ப மனு

திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூர்: நகர்ப்புற தேர்தலில் போட்டியிடுவோரிடம் அ.தி.மு.க. விருப்ப மனு
X
திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வினரிடம் முன்னாள் அமைச்சர் காமராஜ் விருப்ப மனு பெற்றுக்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனுக்கள் கடந்த நான்கு தினங்களாக பெறப்பட்டு வந்தது நிலையில் கடைசி நாளான இன்றைய தினம் திருவாரூரில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா. காமராஜ் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது பேசிய இரா.காமராஜ் தெரிவிக்கையில்

தற்போது டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் மூன்று முறைக்கும் மேல் மூழ்கி முழுமையாக சேதம் அடைந்து உள்ளது. எனவே ஹெக்டேருக்கு 20 ஆயிரம் என்பது ஏக்கருக்கு 20 ஆயிரம் என்ற விதத்தில் நிவாரண தொகையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் சேமிக்கப்பட்டுள்ள நெல் அரவைக்கு அனுப்பப்படாமல் நனைந்து சேதம் அடைந்து வருகிறது. எனவே சேமிக்கப்படும் நெல்லை காலதாமதம் செய்யாமல் உடனடியாக அரவைக்கு அனுப்பினால் மட்டுமே அடுத்த பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். எனவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 29 Nov 2021 11:35 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  6. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  9. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  10. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...