/* */

திருவாரூரில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடி தூவி 5 பவுன் சங்கிலி திருட்டு

அப்பகுதி மக்கள் கவிதாவை மடக்கிபிடித்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து, திருவாரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

திருவாரூரில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடி தூவி 5 பவுன் சங்கிலி திருட்டு
X

திருவாரூரில் நகைக்கடை மிளகாய்ப்பொடி தூவி திருடிய கவிதாவின் கணவர் ஆட்ரோ ஓட்டுனர் கணேசன்

திருவாரூரில் பரபரப்பான கடைவீதியில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடி தூவி 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த கிரன்குமார் (42). இவர்திருவாரூர் அலிவலம் சாலையில் அனிதா ஜுவல்லரி என்கிற நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு புலிவலம் விஷ்ணுதோப்பை சேர்ந்த ஆட்ரோ ஓட்டுனர் கணேசன் மனைவி கவிதா (35) என்பவர் நகைக்கடையில் பர்தா அணிந்து நகை வாங்குவது போல் பேசியுள்ளார். திடீரென கடை உரிமையாளர் கிரண் குமார் மீது, மிளகாய்ப் பொடியை வீசி, அங்கிருந்த 5 பவுன் தங்க சங்கிலிகளை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். உடனடியாக சுதாரித்த கிரண்குமார் கடையின் வெளியே வந்து சப்தம் போட்டுள்ளார்.

இதைக்கவனித்த அப்பகுதி மக்கள், கவிதாவை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து கவிதா மற்றும் கணேசன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் வீடியோயோவாக வெளியாகியதால் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும், நகைக்கடை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் நகை கடை சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Updated On: 2 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?