/* */

என்ன ஆச்சு தேனி பா.ஜ.க.,வுக்கு..?! விழிக்கவேண்டிய தருணம்..!

தேசியம் பேசி பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த பா.ஜ.க., நிர்வாகிகள் பலர் தற்போது தேர்தல் களத்தில் இருந்து விலகி நிற்கின்றனர்.

HIGHLIGHTS

என்ன ஆச்சு தேனி பா.ஜ.க.,வுக்கு..?! விழிக்கவேண்டிய தருணம்..!
X

என்ன ஆச்சு தேனி பாஜகவுக்கு?

தமிழகத்தின் பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் தேனி மாவட்டத்தில் பா.ஜ.க., கொஞ்சம் வீக் தான். மாநிலத்தின் இதர மாவட்டங்களில் வளர்ந்ததை போல் தேனி மாவட்டத்தில் வளரவில்லை. ஆனால் பா.ஜ.க.,வின் இணை அமைப்புகள் அதாவது இந்து எழுச்சி முன்னணி, இந்து முன்னணி, விஸ்வஹிந்த் பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., உட்பட பல அமைப்புகள் நல்ல வலுவான நிலையில் உள்ளனர்.

மிகப்பெரிய வலுவான விஷயம் பா.ஜ.க.,வில் தேனி மாவட்டத்தில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகளில் 80 சதவீதம் பேர் மிக, மிக பொறுப்பானவர்கள், மக்கள் மீதும், தேசியம் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர்கள். கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்கள். கட்சிப்பணி, தேசப்பணிக்காக உழைத்து பல ஆண்டுகள் சிறை சென்ற பலரும் பா.ஜ.க., நிர்வாகியாக உள்ளனர். தேனி மாவட்டத்தில் சமூகத்தில் மரியாதையுடன் வாழும் பலரும் நிர்வாகியாக உள்ளனர். இது மிகுந்த சிறப்புக்குரிய அம்சம்.

இப்படி வாழ்நாள் முழுவதும் பா.ஜ.க.,வுக்காக உழைத்து விட்டு, மக்களின் அன்பையும் பெருமளவு பெற்ற பல முக்கிய பா.ஜ.க., பிரமுகர்கள் தற்போது தேர்தல் நேரத்தில் வீட்டில் உள்ளனர். பிரசார களத்திற்கு வரவில்லை. ஆண்டு முழுவதும் கட்சிக்காக உழைத்து விட்டு, வாழ்நாள் முழுக்க தேசியம் பற்றியே பேசிக்கொண்டிருந்த நீங்கள், தேர்தல் நேரத்தில் ஒதுங்கி நிற்பது மிகவும் வியப்புக்குரிய விஷயமாக உள்ளதே என அவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.

அவர்கள் அளித்த பதில் சற்று சங்கடத்திற்குரியதாகவே இருந்தது. பா.ஜ.க,வில் தற்போது ஒரு சில நி்ர்வாகிகளின் ஆதிக்கம் தலைதுாக்கி உள்ளது. அவர்கள் மற்ற நிர்வாகிகளை அனுசரித்து செல்வதில்லை. பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர் டி.டி.வி., தினகரனும் முன்பு போல் பிற கூட்டணி கட்சி நிர்வாகிகளை அனுசரித்து செல்வதில்லை. மிகவும் நம்பிக்கையான பா.ஜ.க., நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து வேலை வாங்க அ.ம.மு.க.,வில் ஆள் இல்லை. குறிப்பாக எந்த ஒரு ஒருங்கிணைப்பும் அ.ம.மு.க.,வில் இல்லை.

நாங்களே வலிய சென்றாலும், டி.டி.வி., வீட்டு முன் உள்ள பந்தலில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு திரும்ப வர வேண்டிய நிர்பந்தம் தான் உள்ளது. தவிர எங்களிடம் தேர்தல் வேலைகளையும் பிரித்து வழங்கவில்லை. இதுவரை எங்களைப்போன்றவர்களை பயன்படுத்த வேண்டும் எனக்கூட நினைக்கவில்லை. அவர்களுக்கு தேவையான ஒரு சிலரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வேலை பார்க்கின்றனர். நாங்கள் வேதனையுடன் விலகி நிற்கிறோம் என்றனர்.

முக்கிய கட்சியான தி.மு.க., தேர்தல்களத்தில் தன்னந்தனியாக விளையாடிக் கொண்டுள்ளது. தி.மு.க.,வினருக்கு கடும் நெருக்கடியை கொடுத்து அவர்களை துாக்கமிழக்க செய்வார் தினகரன் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி.டி.வி., தினகரன் பிரசாரத்தில் கூட தி.மு.க.,விற்கு போட்டி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் பா.ஜ.க.,வும் விலகி நிற்பது நல்லதல்ல. பா.ஜ.க., மேலிடம் இதனை உணர்ந்து செயல்படாவிட்டால், வெற்றிப்பதக்கத்தை தி.மு.க., தட்டிச் சென்று விடும் என்று அரசியல் பார்வைர்கள் விமர்சித்து வருகின்றனர்..

Updated On: 7 April 2024 5:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  3. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  5. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  6. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  8. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  9. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு