/* */

தக்காளி, சின்னவெங்காயம் விலை கிடுகிடுவென சரியும்

தமிழகம் முழுவதும் அறுவடை மும்முரமாக தொடங்கி உள்ளதால், தக்காளி, சின்னவெங்காயத்தின் விலை கிடுகிடுவென குறையும்.

HIGHLIGHTS

தக்காளி, சின்னவெங்காயம் விலை கிடுகிடுவென சரியும்
X

காய்கறிகள் (கோப்பு படம்)

தக்காளி, சின்னவெங்காயம் விலை குறைந்துவிடும். இது குறித்து தேனி தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு- மயிலாடும்பாறை ஒன்றியங்களில் தக்காளி சாகுபடி அதிகம் நடக்கிறது. இங்கு தற்போது மும்முரமாக அறுவடை தொடங்கி உள்ளது. அதேபோல் பெரியகுளம் ஒன்றிய பகுதிகளிலும் தக்காளி அறுவடை தொடங்கி உள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ளது.

எனவே இன்னும் ஓரிரு நாட்களில் தக்காளி விலை கிலோ 25 ரூபாய்க்கும் கீழே வந்து விடும். திருப்பூர், தாராபுரம், பல்லடம் பகுதிகளில் சின்னவெங்காயம் அறுவடை தொடங்கி உள்ளது. வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சின்னவெங்காயம் வரத்து அதிகம் உள்ளது.

இதனால் சின்னவெங்காயத்தின் விலையும் கிடுகிடுவென சரியும். இடையில் மழை பெய்தால் விளைச்சல் பாதிக்கும். விளைந்த தக்காளி, சின்னவெங்காயம் அழுகும். இதனால் விளைச்சல் அறுவடை பாதிக்கப்பட்டு வரத்து குறையும். இதுபோன்ற சூழல் தற்போது ஏற்பட வாய்ப்புகள் குறைவு.

எனவே, விலை தான் குறையும். ஆவணி மாதம் என்பதால் இடையில் வரும் முகூர்த்த நாட்களில் விலை அன்றைய மார்க்கெட் விலையில் இருந்து அதிகபட்சம் 5 ரூபாய் வரை மட்டுமே உயரும். அதற்கு மேல் விலை அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை. தற்போது அனைத்து காய்கறிகளின் விளைச்சலும் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் உழவர்சந்தைகளிலேயே கூட அத்தனை காய்கறிகளின் விலைகளும் குறைந்துள்ளன. இவ்வாறு கூறினர்.

தேனி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவிற்கு ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ளது): கத்தரிக்காய்- 25, தக்காளி- 40, வெண்டைக்காய்- 20, கொத்தவரங்காய்- 24, சுரைக்காய்- 15, புடலங்காய்- 25, பாகற்காய்- 18, பீர்க்கங்காய்- 34, முருங்கைக்காய்- 30, உருட்டு பச்சைமிளகாய்- 50, செடிஅவரைக்காய்- 42, தேங்காய்- 26, உருளைக்கிழங்கு- 45, கருணைக்கிழங்கு- 60, சேப்பங்கிழங்கு- 60, கருவேப்பிலை- 26, கொத்தமல்லி- 22, புதினா- 35, சின்னவெங்காயம்- 58, பெரியவெங்காயம்- 34, பீட்ரூட்- 25, நுால்கோல்- 30, முள்ளங்கி- 20, முருங்கைபீன்ஸ்- 24, முட்டைக்கோஸ்- 35, காரட்- 60, டர்னிப்- 35, சவ்சவ்- 26, காலிபிளவர்- 30, பச்சைபட்டாணி- 110, சேம்பு- 45, எலுமிச்சை- 65, பப்பாளி- 26, கீரைவகைகள்- 25. இவ்வாறு விற்கப்படுகிறது.

Updated On: 19 Aug 2023 4:36 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!