/* */

விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமல்ல அதிரடி சோதனையில் ஈடுபடும் போலீஸார்

தேனி மாவட்டம் கூடலூரில் புகையிலை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமல்ல  அதிரடி சோதனையில் ஈடுபடும் போலீஸார்
X

பைல் படம்

தேனி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளின் அருகே போதை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் கூடலூர் வடக்கு தெற்கு காவல் நிலைய போலீசார் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலத்தை நடத்தினர்.

இதன் பின்பும் பள்ளியின் அருகே போதைப்பொருள்களை விற்பனை செய்வதாக பள்ளி மாணவர்கள் போலீசாருக்கு ரகசிய தகவலினை அளித்தனர்.தகவலை தொடர்ந்து நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர். புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர், கூடலூர் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பின் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்து, உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததுகுட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்ததுடன், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கு புதிதாக அரசாணை வெளியிடவும் அனுமதியளித்தது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.


Updated On: 30 Dec 2023 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்