/* */

prime minister speech அந்தமான் நிகோபார் சர்வதேசமுனைய திறப்பு விழா :பிரதமர் மோடி பேச்சு

prime minister speech எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஊழல் கடையை மீண்டும் திறந்துள்ளனர் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

HIGHLIGHTS

prime minister speech   அந்தமான் நிகோபார் சர்வதேசமுனைய திறப்பு விழா :பிரதமர் மோடி பேச்சு
X

 பிரதமர் நரேந்திர மோடி (கோப்பு படம்)

prime minister speech

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ராகுல்காந்தி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கௌரவிக்கப்படுகிறார் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்தமானின் போர்ட் பிளேயரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசியதாவது:எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மீண்டும் ஊழல் கடையை திறந்துள்ளனர். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் கூட இக்கூட்டத்தில் கௌரவிக்கப்படுகின்றனர். ஊழல் மற்றும் வம்ச, குடும்ப கட்சிகள் சாதாரண இந்தியனின் திறனுக்கு அநீதி இழைத்தன. இந்தியாவில் நீண்ட காலமாக, சில கட்சிகளின் சுயநல அரசியலால், பெரு நகரங்களின் வளர்ச்சி தடைபட்டது. பழங்குடியினர் மற்றும் தீவுப் பகுதிகள் வளர்ச்சியை இழக்க நேரிட்டன. தமிழகத்தில் ஊழல் வழக்குகள் இருந்த போதிலும் எதிர்க்கட்சி அணிகள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கின்றன.

தற்போது ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் கூட்டத்தை கூட்டியுள்ளனர். எது எப்படி இருந்தாலும் 2024ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பா.ஜ.க அரசை கொண்டு வர வேண்டும் என்று நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவில் நடப்பது என்ன?

இந்தியாவைப் பொறுத்தவரை ஆளும் கட்சியாக இருப்பவர்கள் எதிர்க்கட்சிகளைச் சாடிவருவதல் தொன்றுதொட்டு நடந்து வரும் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அது மத்தியில்இருந்தாலும் சரி, மாநிலத்தில் இருந்தாலும் சரி மக்கள் பிரச்னைகளில் எந்தவொரு ஆளும் கட்சியும் கவனம்செலுத்த வேண்டும். அதனைவிடுத்து எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் செய்த சாதனைகளையும், ஊழல்களையும் பற்றி பேசிக்கொண்டிருந்தால் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க இவர்களுக்கு ஏது நேரம்?. இதுதான் தற்கால அரசியலில் நடந்து வருகிறது. தமிழகத்தினை எடுத்துக்கொள்ளுங்கள். அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் இவர்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி இவர்களும் குறை சொல்லிக்கொண்டு இருந்தால் மக்கள் பிரச்னைகள் எப்படித் தீர்க்கமுடியும்? இந்தியாவில் தற்காலத்தில் புற்றீசல் போல் வளர்ந்துள்ள ஊழல்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஒவ்வொரு மாநிலமாக திட்டமிட்டு சோதனை நடத்தி வெளிக்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை. அந்த துறை என்று ஒன்று இல்லாவிட்டால் அவ்வளவுதான் போங்க. அவர்கள் சோதனையும் ஒரே நாளில் முடியாமல் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் என இழுத்துக்கொண்டே செல்கின்றது என்றால் எவ்வளவு சொத்துகளை சேர்த்திருப்பார்கள் அரசியல் வாதிகள். எனவே எதிர்காலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் செய்ய முடியாது . காரணம் மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதே நிலை நீடித்தால் வரவுள்ள லோக்சபா தேர்தலில் மக்கள் நிச்சயம் நோட்டாவை வெற்றி பெறச் செய்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. காரணம் தேர்ந்தெடுக்கும் எந்த மக்கள் பிரதிநிதிகள் எவருமே மக்கள் பிரச்னைகளில் நாட்டின் பிரச்னையில் கவனம் செலுத்தாமல் எதிர்க்கட்சிகள் பற்றியும்., ஊழல் செய்து சொத்து சேர்ப்பதில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தால் இந்திய மக்கள் எத்தனை நாட்களுக்குதான் பொறுத்துக்கொண்டு இருப்பார்கள். அதனால் வாக்களிப்பது நம் கடமை என அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று நோட்டாவிற்கு வாக்களித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லைங்கோ....

எனவே தற்போது ஆட்சியில் உள்ள பாஜவும் எதிர்க்கட்சியில் உள்ள காங்கிரசும் இனியாவது வருங்காலத்தில் தங்களுடைய போக்கினை மாற்றிக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளைச் சாடுவதை ஆளும் அரசு அது எதுவாக இருந்தாலும் சரி கைவிட வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் எந்த சபையின் நேரத்தினையும் அனாவசியமாக வெளிநடப்பு, முற்றுகை, உள்ளிருப்பு போராட்டத்தால் வீணடிக்க கூடாது. பிரச்னைகளை எதிர்த்து சபையில் பேசுங்களேன்... ஏன் வெளிநடப்பு செய்கிறீர்கள், அதற்காகவே மக்கள் வாக்களித்து உங்களை சபைக்கு அனுப்பினர்? இனியாவது மாறுங்க அரசியல் கட்சிகளே...

Updated On: 19 July 2023 6:35 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  5. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  10. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...