/* */

காசு கொடுத்து மக்கள் நோயை வாங்கும் நிலையில் தேனி வாரசந்தை

Market In Tamil - காசு கொடுத்து மக்கள் நோயை வாங்கும் நிலையில் தேனி வாரசந்தை நடைபெறும் இடம் இருப்பதால் அதனை சீரமைக்க கோரிக்கை உள்ளது.

HIGHLIGHTS

காசு கொடுத்து மக்கள் நோயை வாங்கும் நிலையில்   தேனி வாரசந்தை
X

தேனி வார சந்தை நடைபெறும் மைதானம்.

Market In Tamil - தேனியில் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தை, வாரந்தோறும் சனிக்கிழமை கூடுகிறது. வெள்ளி இரவே வியாபாரிகள் சந்தைக்கு வந்து விடுவார்கள். சனிக்கிழமை முழுமையாக வியாபாரம் நடைபெறும். குறைந்தது 350 முதல் 500 கடைகள் வரை அமைக்கப்பட்டிருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும்.

சந்தை அமையும் இடத்தின் சுகாதாரம் மட்டுமே ஆரம்ப காலம் முதலே கேள்விக்குறியாக உள்ளது. சந்தை செயல்படும் இடம் கவுமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமானது. எனவே நகராட்சியால் அங்கு பணிகளை செய்ய முடியவில்லை. கவுமாரியம்மன் கோயில் நிர்வாகமும் செய்ய முடியவில்லை.

நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்தாலும், இந்த வளாகத்தை பலரும் உலர் கழிப்பிடமாகவே பயன்படுத்துகின்றனர். சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்ற வேலைகள் நடக்கின்றன. சந்தை கூடும் போது இதனை சுத்தம் செய்யவே முடியாது. பல நேரங்களில் இந்த கழிவுகள் மீது சாக்கை விரித்து காய்கறிகளை பரப்பி விற்கின்றனர்.

மிகவும் அசுத்தமான சூழலில் காய்கறிகள் விற்கப்படுகிறது. இதனை வாங்கி பயன்படுத்தும் மக்களுக்கு நோய் வராமல் என்ன செய்யும். மக்கள் காசு கொடுத்து நோய் வாங்கும் சூழல் தான் இங்கு நிலவுகிறது. இதேபோல் இருந்த கம்பம் வாரச்சந்தை தற்போது பல கோடி ரூபாய் செலவில் சுத்தப்படுத்தப்பட்டு நவீனப்படுத்தப்பட்டு விட்டது. தேனி சந்தை வளாகத்தை சுத்தம் செய்ய முடியாவிட்டால், வேறு இடத்திற்கு மாற்றி அங்கு சந்தையை செயல்படுத்த வேண்டும். இப்படி ஒரு கழிப்பிடப்பகுதியை சந்தையாக செயல்படுத்துவதை சமூக ஆர்வலர்கள் பலரும் தொடர்ச்சியாக கண்டித்து வருகின்றனர். புதிய நகராட்சி தலைவராவது இதனை சரி செய்ய வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Aug 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்