/* */

தேனி மாவட்டத்தில் கடைசிகட்ட நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது

தேனி மாவட்டத்தில் நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், பெண்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கடைசிகட்ட நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது
X

தேனி மாவட்டத்தில் நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது

தேனி மாவட்டத்தில் நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது நடவுப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு தினசரி சம்பளமாக ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பில் நெல் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. நெல் நடவுக்கு எந்திரங்களை பயன்படுத்துமாறு வேளாண்மைத்துறை அறிவுறுத்தினாலும், விவசாயிகள் தினக்கூலி தொழிலாளர்கள் மூலம் கை நடவு செய்வதையே விரும்புகின்றனர்.

தற்போது தேனி மாவட்டத்தி்ல் விவசாய கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது. வேலைக்கு ஆள் கிடைப்பதே தட்டுப்பாடாக உள்ளது. அதுவும் நடவு செய்ய தெரிந்த பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக, மிக குறைவாக உள்ளது. எனவே குறைந்த தொழிலாளர்களை கொண்டு விரைவில் நடவுப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், விவசாயிகள் தங்கள் நிலங்களை கான்ட்ராக்ட் அடிப்படையில் நடவுக்கு விட்டு விடுகின்றனர்.

குறிப்பிட்ட அளவு பணம் வாங்கிக் கொள்ளுங்கள், நிலத்தை முழுமையாக நடவு செய்யுங்கள் என கான்ட்ராக்ட் பேசி விடுகின்றனர். கான்ட்ராக்ட் பணி என்பதால், காலை ஆறு மணிக்கு பணிகளை தொடங்கும் பெண்கள், மாலை ஆறு மணி வரை பணிகளை செய்கின்றனர். இப்பணி கூடுதல் நேரம் வேலை செய்வதாலும், கான்ட்ராக்ட் அடிப்படையில் பணிகளை செய்வதாலும் தினசரி சம்பளமாக தலா ஒருவருக்கு ஆயிரம் ரூ;பாய் வரை கிடைக்கிறது. சில நேரங்களில் கூடுதலாகவும் கிடைக்கும்.

தற்போது திராட்சை வெட்டுதல், களையெடுத்தல், விதைப்பு, காய்கறிகள் பறிப்பது போன்ற அனைத்து விவசாய பணிகளும் கான்ட்ராக்ட் அடிப்படையில் நடப்பதால், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கட்டுபடியான சம்பளம் கிடைக்கிறது என விவசாய தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Updated On: 25 July 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  9. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  10. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!