/* */

பா.ஜ.க.விடம் இருந்து விலக எடப்பாடி பழனிசாமி திட்டமா?

Edappadi Palaniswami - ஓ.பி.எஸ்.,க்கு பா.ஜ.க அதிகளவு முக்கியத்துவம் தருவதால், பா.ஜ.,விடம் இருந்து விலக எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

HIGHLIGHTS

பா.ஜ.க.விடம் இருந்து விலக எடப்பாடி பழனிசாமி திட்டமா?
X

எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palaniswami - இன்று ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் பா.ஜ.க.,வை மையமாக வைத்தே சுழல்கிறது. மதுரையில் நிதி அமைச்சர் அவமதிக்கப்பட்டதாக இருந்தாலும், ஈ.வெ.ரா., சிலை விமர்சித்த ஸ்டண்ட் மாஸ்டர் கைது செய்யப்பட்ட விவகாரமாக இருந்தாலும், செஸ் ஒலிம்பியாட் விளம்பர காயினில் சிலுவை படம் உள்ளதாக எழுப்பப்பட்ட புகாராக இருந்தாலும், அ.தி.மு.க., உள்கட்சி மோதலாக இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்ற விவகாரமாக இருந்தாலும் சரி எந்த ஒரு அரசியல் விவகாரமாக இருந்தாலும் இன்று பா.ஜ.,வை மையப்படுத்தியே சுழல்கிறது. பா.ஜ., இல்லாமல், தமிழக அரசியல் இல்லை என்ற நிலையை அண்ணாமலை உருவாக்கி விட்டார்.

இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக், கவர்னர் வழங்கிய சுதந்திர தின விருந்திற்கு எடப்பாடி ஏன் செல்லவில்லை என்பது தான். இந்த விஷயத்திலும் ஹீரோ பா.ஜ., மட்டுமே. இது பற்றி பார்ப்போம். இப்போது பா.ஜ., ஐ.டி., விங்க் மூலம் பகிரப்படும் செய்தி இன்ஸ்டா நியூஸ் வாசகர்களின் பார்வைக்கு வழங்குகிறோம்.

தொண்டர்கள் பலம் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து பாஜ முக்கியத்துவம் கொடுப்பதால், கோபத்தில் கவர்னர் அளித்த விருந்தை எடப்பாடி பழனிசாமி நேற்று புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், நீதிமன்றத்தில் அ.தி.மு.க. கட்சி விவகாரம் தனக்கு சாதகமாக வரும் வரை பொறுத்திருந்து, கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கலாம் என ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில், சுதந்திர தின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ், த.மா.கா ஆகிய கட்சிகளோடு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பங்கேற்றார். ஆனால், இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்ளவில்லை. அவர், சென்னையில் இருந்தும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதற்காக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விருந்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் கவர்னர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி, இந்த விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. விருந்தில், எடப்பாடி பழனிசாமி வேண்டும் என்றே கலந்துகொண்டார். ஆனால், இப்போது நடந்த இந்த விருந்தை அவர் புறக்கணித்துள்ளார். அவரது அரசியல் எதிரணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டது இதற்கு முக்கிய காரணம், கடந்த சில நாட்களாக பா.ஜ. மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளாராம்.

ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது, பா.ஜ. வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் மோடி அழைத்திருந்தார். ஆனால் பன்னீர்செல்வம் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதால், எடப்பாடி கலந்துகொள்ளவில்லை. தனது சார்பில் தம்பிதுரையை அனுப்பி வைத்தார். அதேநேரத்தில் பதவி முடிந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழியனுப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதற்காக, 5 நாட்கள் டெல்லியில் முகாமிட திட்டமிட்டிருந்தார். விழாவில், அண்ணாமலை அருகில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மோடி, அண்ணாமலையிடம் பேசியவர், எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் செலுத்தியதோடு கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார். எனவே, மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி நேரம் கேட்டார். ஆனால் இருவரும் நேரம் ஒதுக்கவில்லை. அண்ணாமலை மூலம் நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. மேற்கு மண்டலத்தில் குறிப்பாக கொங்கு பகுதியில் இரு தலைவர்கள் உருவாவதை அண்ணாமலை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால்தான் மோடி, அமித்ஷாவிடம் நேரம் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் டெல்லி பயணத்தை பாதியிலேயே எடப்பாடி ரத்து செய்து விட்டு சென்னை திரும்பி விட்டார். அதேநேரத்தில் ராம்நாத் கோவிந்த் வழியனுப்பு விழாவில், ஓ.பன்னீர்செல்வம், கொரோனா தொற்று காரணமாக பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், செஸ் போட்டியை தொடங்கி வைக்க மோடி சென்னை வந்தபோது அவரை வரவேற்க எடப்பாடி பழனிசாமிக்கும், வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இருவரும் தனித்தனியாக சந்திக்க அனுமதி கேட்ட போது மோடி மறுத்து விட்டார். இதனால் ஆட்சியில் இருந்தபோது புதுப்பெண்ணை பார்க்க வருவதுபோல, விரும்பி விரும்பி வந்த பா.ஜ. தற்போது தன்னை திட்டமிட்டு புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி கருதுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பா.ஜ. மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மேடையில் அமர்ந்திருந்தார். அமைச்சர்களுக்கு தனியாக இருக்கை போடப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் மற்றும் பாஜவினர் என்று பாஜவுக்கு மட்டும் தனி இருக்கைகள் போடப்பட்டிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் என தனியாக இருக்கை போடப்படவில்லை. இந்த விழாவில் பா.ஜ.வுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தனக்கு அளிக்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தையும் தன்னையும் ஒன்றாக கருதுகின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி சந்தேகப்பட்டார். இதனால் கவர்னர் அளித்த தேநீர் விருந்தை சென்னையில் இருந்து கொண்டே புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மூத்த தலைவர்களிடமும் அவர் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னை தொடர்ந்து புறக்கணிக்கும் பா.ஜ.வை எச்சரிக்கும் வகையிலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம். அதேநேரத்தில், அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினை குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்வரை அமைதியாக இருப்பது. தனக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்திலோ, அல்லது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலோ பா.ஜ.வுக்கு எதிராக அதிரடி முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழக அரசியலில் அடுத்த அதிரடி ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 11:54 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்