/* */

மேகமலையில் சரணாலயம் பகுதியில் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள்

மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் உள்ள அரசு பயணியர் விடுதியில் காலி மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.

HIGHLIGHTS

மேகமலையில் சரணாலயம் பகுதியில் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள்
X

மேகமலை அரசு சுற்றுலா பயணியர் விடுதியில் குவிந்து கிடக்கும் காலி மதுபாட்டில்கள்.

மேகமலையில் உள்ள அரசு சொகுசு விடுதிகளில் தங்கியிருப்பவர்கள், மதுபாட்டில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. மேகமலை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்ட பின்னரும், வன பாதுகாப்பில் பெரும் பின்னடைவே ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள அரசு சுற்றுலா விடுதிகளில் தங்கும் வி.ஐ.பி.,க்கள் உட்பட பலரும் மதுபாட்டில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். காலி பாட்டில்களை, சிலர் உடைத்து வனத்திற்குள் வீசி விடுகின்றனர்.

உடைக்காத மதுபாட்டில்களே பல ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன. இதனால் வனவிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழலும் கடுமையாக மாசுபடுகிறது. இதனை தடுக்க, தேனி மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 14 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு