/* */

மூன்றாவது ஆண்டாக விற்பனையில் பலத்த அடி..! தேனி வணிகர்களுக்கு சோதனை..!

தேனி வணிகர்களுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக விற்பனையில் பலத்த அடி விழுந்துள்ளது.

HIGHLIGHTS

மூன்றாவது ஆண்டாக விற்பனையில் பலத்த அடி..!  தேனி வணிகர்களுக்கு சோதனை..!
X

தீபாவளிக்கு முதல் நாள் மாலை ஆறு மணிக்கு தேனியில் மதுரை ரோடு எந்த பரபரப்பும் இன்றி சாதாரணமாக காணப்பட்டது. 

தேனி மாவட்டத்தின் தலைநகரான தேனியில் மதுரைக்கு இணையான வணிக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளன. எண்ணிக்கையில் ஒப்பிடும் போது மதுரையில் அதிகம் தான். ஆனால் மதுரையின் தரத்திலும் விலையிலும் தேனியில் கிடைக்கும். அந்த அளவு பெரிய வணிக நிறுவனங்கள் உள்ளன.


கொரோனா பேரைச் சொல்லி இரண்டு தீபாவளி ஒன்றுமில்லாமல் போய் விட்டது. இந்த ஆண்டு மூன்றாவது தீபாவளியும் விற்பனையில் பலத்த இழப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு நகர்ப்புறங்களில் தீபாவளி விற்பனை ஓரளவு நல்லமுறையில் இருந்தது. ஆனால் தேனி முழுக்க கிராமங்கள் நிறைந்த மாவட்டம். விவசாயம் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியாக வேறு தொழில்கள் எதுவும் இல்லை. கொரோனா கொடுத்த அடியில் இருந்து தேனி மாவட்டம் இன்னும் மீளவில்லை என்பதை இந்த தீபாவளி உறுதி செய்து விட்டது.


வழக்கமாக பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜைகள் கூட இந்த ஆண்டு தடபுடல் இன்றி கொண்டாடப்பட்டது. அப்போதே சுதாரித்த பலர் தங்களது தீபாவளி முதலீட்டை குறைத்துக் கொண்டனர். சிலர் நன்றாக இருக்கும் என நம்பி முதலீடு செய்து சிக்கிக் கொண்டனர்.


தீபாவளி விற்பனையில் தேனியில் களை கட்டியது ஸ்வீட், கார வகைகள் மட்டுமே. சமூகத்தின் அத்தனை நிலைகளிலும் வசிப்பவர்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல முதலில் வழங்குவது ஸ்வீட் மற்றும் கார வகைகளை தான். இதனால் தேனி மார்க்கெட்டில் மட்டுமல்ல....மாவட்டம் முழுவதும் ஸ்வீட், கார வகைகள் விற்பனை சக்கை போடு போட்டது. இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் இந்த ஆண்டு இனிப்பான தீபாவளி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பலசரக்கு, மொபைல், எலக்ட்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள், அழகுசாதனங்கள் போன்ற பொருட்களின் விற்பனை கூட 35 சதவீதம் வரை டல்லாக இருந்தது என வணிகர்கள் தெரிவிக்கின்றனர். பலத்த அடி வாங்கியது ஜவுளித்துறையும், பட்டாசு விற்பனையும் தான். தேனி மாவட்டம் முழுவதுமே ஜவுளி விற்பனை சரி பாதி இழப்பினை சந்தித்துள்ளது. மெயின் ரோடுகளில் உள்ள பெரிய ஜவுளி நிறுவனங்களே பலத்த அடி வாங்கிய நிலையில், சிறிய ஜவுளி விற்பனையாளர்கள் சொல்ல முடியாத அளவு அடி வாங்கி விட்டனர். வழக்கமாக சாதாரண நாட்களில் நடைபெறும் வியாபாரம் கூட தீபாவளி பண்டிகை நாட்களில் இல்லை.

குறிப்பாக தீபாவளிக்கு ஒரு வாரம் முதல் 10 நாள் முன்னதாகவே மதுரை ரோட்டில் நுழைய முடியாது. அந்த அளவு கூட்டம் இருக்கும். பெரியகுளம் ரோடும், கம்பம் ரோடும் நிரம்பி வழியும். இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளுக்கு முதல் இரண்டு நாள் மட்டுமே ஓரளவு கூட்டத்தை பார்க்க முடிந்தது. தீபாவளிக்கு முதல் நாள் அதாவது நேற்று வியாபாரம் டல்லடித்தது. பஜாரே களையின்றி வழக்கமான காலங்களில் காணப்படுவதேபோல் தான் இருந்தது.


தீபாவளி பட்டாசு விற்பனையும் பலத்த அடி வாங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது என பட்டாசு வணிகர்கள் தெரிவித்தனர். மொத்தத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த தீபாவளி தேனி மற்றும் தேனி மாவட்ட வணிகர்களுக்கு இனிப்பில்லா தீபாவளியாகவே நிறைவுக்கு வந்துள்ளது. வணிகர்களை பொறுத்தவரை பெரும்பாலானோர் போட்ட முதலீட்டில் ஒரு சிறிய சதவீதம் கூட திரும்ப எடுக்க முடியவில்லை என புலம்புவதை காண முடிந்தது.

Updated On: 24 Oct 2022 9:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  3. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  4. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  6. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  10. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது