Begin typing your search above and press return to search.
கழிவுநீர் தேங்கி நிற்கும் கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோடு
கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
HIGHLIGHTS

கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டில் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது.
கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் செல்லும் ரோட்டில் ஏராளமான குடியிருப்புகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இந்த நிலங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், விளைபொருட்களை எடுத்துச் செல்பவர்களும், குடியிருப்பு பகுதி மக்களும் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டை தான் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. நீண்ட துாரத்திற்கு கழிவுநீர் ரோட்டில் நிற்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கம்பம் நகராட்சி நிர்வாகம் இந்த ரோட்டில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்