/* */

மாடு மேய்க்கத்தடை: வனத்துறை முடிவை கண்டித்து விவசாயிகள் முற்றுகை

மேகமலையில் மாடுகளை மேய்க்க தடை விதித்த வனத்துறையின் உத்தரவை விலக்கக்கோரி, சின்னமனுார் வனச்சரகர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

மாடு மேய்க்கத்தடை: வனத்துறை முடிவை கண்டித்து  விவசாயிகள் முற்றுகை
X

சின்னமனுார் வனச்சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

தேனி மாவட்டம், மேகமலை வனவிலங்குகள் சரணாலயம், கடந்த ஆண்டு புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர், வனவளத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வன ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வனத்திற்குள் மூன்று தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு வெளியேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வனத்திற்குள் மாடுகளை மேய்க்கக்கூடாது என, வனத்துறை தடை விதித்தது. இதனால் மாடு வளர்ப்போர் பெரும் கவலைக்குள்ளாகி உள்ளனர். வனத்துறை தடையை கண்டித்து, இன்று சின்னமனுார் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஐந்து மணி நேரத்தை கடந்தும், முற்றுகை போராட்டம் நீடித்தது. வனத்துறை அதிகாரிகள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

Updated On: 29 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!