ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் கபசூர குடிநீர் வழங்கல்

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் ஏராளமான குழந்தைகள் கபசுர குடிநீர் வாங்கி பருகி வருகின்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் கபசூர குடிநீர் வழங்கல்
X

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் தினமும் இலவசமாக வழங்கப்படும் கபசுர குடிநீரை குடிக்க குழந்தைகள் அதிகளவில் வருகின்றனர்.

மதுரை மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தினமும் கபசூரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனாவிற்கு முன்பே டெங்கு காய்ச்சலும், சிக்குன்குனியா காய்ச்சலும் மக்களை பாடாய்படுத்தியது. டெங்கு காய்ச்சலை தடுக்க சித்த மருத்துவத்தின் கபசுர குடிநீர் பெருமளவில் உதவியது. இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் நோயாளிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ச்சியாக வழங்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

இதன் மூலம், அலோபதி சிகிச்சைக்கு தினமும் வரும் மக்கள் கூட கபசுரக் குடிநீரை குடித்து விட்டு செல்வதை வழக்கமாக்கி கொண்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தினமும் வழங்க தொடங்கிய சித்தமருத்துவ பிரிவு தற்போது வரை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. தற்போது தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தினமும் குடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது குழந்தைகளுக்கு அதிகளவு காய்ச்சல் பரவி வருவதால், குழந்தைகளை அழைத்து வந்து டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவு கபசுர குடிநீரை வாங்கி குழந்தைகளுக்கு தருகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

Updated On: 21 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

 1. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 2. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 3. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 4. நாமக்கல்
  நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள்...
 5. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் உணவகத்துக்கு சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்
 6. கும்மிடிப்பூண்டி
  பெரியபாளையம் அருகே ஸ்ரீ சாய்பாபா கோவில் 4-ம் ஆண்டு வருடாபிஷேக விழா...
 7. மேலூர்
  மதுரை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி: மேயர் தொடக்கம்
 8. லைஃப்ஸ்டைல்
  லவ் ரொமான்டிக் பர்த்டே கேக் -காதலர்களுக்கு இனிப்பான சேதி..!
 9. ஈரோடு
  ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே மேம்பால தூணில் அரசு பேருந்து மோதி...
 10. லைஃப்ஸ்டைல்
  முடி உதிர்தல் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளும், கட்டுப்படுத்துவதற்கான...