/* */

நகரப் பேருந்துகள் இயக்க கோரி திருவையாறு- கும்பகோணம் சாலையில் மறியல்

நகரப் பேருந்துகள் இயக்க கோரி, திருவையாறு- கும்பகோணம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

HIGHLIGHTS

நகரப் பேருந்துகள் இயக்க கோரி திருவையாறு- கும்பகோணம் சாலையில் மறியல்
X

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

தஞ்சையில் இருந்து அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம், கபிஸ்தலம் வரை நகரப் பேருந்து இயக்கக்கோரி. திருவையாறு -கும்பகோணம் சாலையில் கணபதி அக்ரஹாரம் மெயின்ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கண்ணையன், மாவட்ட செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியல் போராட்டம் பற்றி தகவல் அறிந்த பாபநாசம் டிஎஸ்பி பூரணி, தாசில்தார் மதுசூதனன், கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தஞ்சை கோட்ட மேலாளர் செந்தில், வணிகப் பிரிவு துணை மேலாளர் கணேசன், கிளை மேலாளர்கள் அஜய் வெங்கடேசன், சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் யோகராஜ் ஆகியோர் நேரில் சென்று சாலை மறியல் செய்தவர்களை அழைத்து தனியார் திருமண மண்டபத்தில் அமரவைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், தஞ்சையில் இருந்து அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலம் வரை நகரப் பேருந்து இயக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசுத் துறை அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கினர். அதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 18 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  8. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...
  9. கோவை மாநகர்
    கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்