/* */

தஞ்சை குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.57,49,129 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விகடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 344 மனுக்கள் பெறப்பட்டது

HIGHLIGHTS

தஞ்சை குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.57,49,129 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி
X

பைல் படம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.57,49,129 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப ட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விகடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 344 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை விசாரணைசெய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக் குவழங்கப்பட்டுள்ளது. மேலும்,மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தைஉடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர்

பின்னர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 2021-2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த சமையலர் மற்றும் உதவியாளர் விருது, பாராட்டு சான்றிதழ் ரூபாய் 5000 ரொக்கப்பரிசு இரண்டு நபர்களுக்கும், மாவட்டஅளவில் நடைபெற்ற சமையல் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்; ரூ.2500 முதல் பரிசும் ரூ.1500 இரண்டாம் பரிசுத் தொகைக்கான மதிப்பிலான காசோலையை வழங்கினார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மதுக்கூர் வட்டம் ஆலத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பெருங்கடன் ரூபாய் 49 லட்சம் மதிப்பில் காசோலையும்,துபாய் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாட்டில் பணியின் போது இறந்த 3 நபர்களின் குடும்பத்தினருக்கு சட்டப்படியான நிலுவைத் தொகை ரூபாய் 8,35,129 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் ,மாவட்டஆட்சியர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அன்பரசன், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) (பொ) ரேணுகாதேவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 May 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...