/* */

விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

நடப்பு சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு ஏக்கருக்கு முப்பது ஆயிரம் வழங்க வேண்டும்

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
X

தஞ்சையில் நடைபெற்ற நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி

விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்! தஞ்சையில் இடதுசாரிகள் சார்பில் நடைபெற்ற இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பத்தாவது நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் ரெயிலடி முன்பு இடதுசாரிகள் பொது சார்பில் நடைபெற்றது. நிகழ்விற்கு தாளாண்மை உழவர் இயக்க தலைவர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.

இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத்தலைவர் அயனாவரம் சி. முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி பி எம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். ராமச்சந்திரன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் அ.ரெ.முகிலன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், ஏஐடியூசி ஒய்வு பெற்றோர் சங்கத்தின் துணைச் செயலாளர் பி.சக்திவேல், மருத்துவ மாணவி ஏ.அபிநயா, ஆசிரியர்ஓய்வு லூர்துசாமி,சமூக ஆர்வலர் தஞ்சை செல்வகணேஷ், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஆர்.மலைச்சாமி, கண்ணன், சக்திவேல், முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வில் விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், இன்று 386 வது நாளாக போராடிவரும் திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் கோரிக்கையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு வாழ்விழந்துள்ள விவசாயிகள் கோரிக்கையில் உரிய தீர்வு காணப்பட வேண்டும். நடப்பு சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு முப்பது ஆயிரம் வழங்க வேண்டும்.

ஒன்றிய மோடி அரசு டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தவாறு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்தை சட்டமாக்க வேண்டும். டெல்லி போராட்டத்தில் நாடு முழுவதும் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும். தொழில் உற்பத்தி, விவசாயிகள், அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கின்ற புதிய மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

முடிவில் இயற்கை ரசாயனம் மற்றும் மலட்டு விதைகளால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை உற்பத்திக்கு எதிராகவும், மலட்டு உற்பத்திக்கான விதைகள், இரசாயன உரங்களை விற்பனை செய்யும் அமெரிக்காவின் மாண்சாண்டோ உள்ளிட்ட ஏகபோக கம்பெனிகளை விரட்டி அடிப்போம், இயற்கை பேரிடர் நிகழ்வுகள் தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்பட்டு வருகிறது, ஆதலால் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும், மனித குலத்தையும் பாதுகாப்போம் என்ற உறுதி ஏற்கப்பட்டது.

Updated On: 31 Dec 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  9. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  10. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...