/* */

தமிழக பாஜக அரசியல் நாடகமாடுவதை கைவிட வேண்டும்: இரா.முத்தரசன்

தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தால் மக்களுக்கு நல்லது

HIGHLIGHTS

தமிழக பாஜக அரசியல் நாடகமாடுவதை கைவிட வேண்டும்: இரா.முத்தரசன்
X

தஞ்சையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய  மாநில செயலாளர் முத்தரசன்.

தமிழக பாஜக அரசியல் செய்வது அரசியல் நாடகமாடுவதை கைவிட வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதன் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்துறை அமைச்சரிடம் கேட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும். ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் காலம் தாழ்த்தக் கூடாது. பாரதிய ஜனதா கட்சி தமிழக அரசு நிதி வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர், ஆனால் அவர்கள் தமிழக அரசு கேட்ட நிதியை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். ஆர்ப்பாட்டம் கூட செய்ய தேவையில்லை, நிதியமைச்சரையோ, பிரதமரை சந்தித்து வலியுறுத்தானலே போதும்,.எனவே தமிழக பாஜக அரசியல் செய்வது, நாடகமாடுவாதை கைவிட வேண்டும்.

ஜெய்பீம் படத்திற்கு எதிராக அவதூறு பரப்புவது, மிரட்டுவது போன்ற வேலைகளை ஜாதிவெறி கட்சியும், மதவெறி கட்சியும் தான் செய்து வருகின்றனர். படத்தை படமாக தான் பார்க்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை பெரிதுப்படுத்தி இதில் சிலர் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். மேலும் அரசு அறிவித்துள்ள ஹெக்டருக்கு 20,000 என்பது போதாது, எனவே நாளை மறுநாள் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலனை செய்து, ஏக்கருக்கு 30,0000 வாழங்க வேண்டும். நெல் மட்டும் இல்லாமல் மானவாரி பயிர்கள், கால்நடை என அனைத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும். நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதில் அந்த காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அவரை பணி மாறுதல் செய்வது போதாது, பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் முத்தரசன்..

Updated On: 18 Nov 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  2. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்