/* */

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகள்: அரசுசெயலர்கள் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகள்: அரசுசெயலர்கள் ஆய்வு
X

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை அரசு கூடுதல் தலைமைசெயலாளர் டாக்டர்சந்தீப் சக்சேனா  தஞ்சையில் ஆய்வு செய்தார்

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை அரசு கூடுதல் தலைமைசெயலாளர் டாக்டர்சந்தீப் சக்சேனா மற்றும் மாவட்டகண்காணிப்புஅலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம் முனைவர்.ச.விஜயகுமார் ஆகியோர் தஞ்சையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு தூர்வாரும் பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டத்தில் நடைபெற்றது. தூர்வாரும் பணிகள் சம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாகவும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதாராமு மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் காணொளி காட்சி வாயிலாகவும் கலந்துகொண்டு மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) . ஸ்ரீகாந்த் , மண்டலதலைமைப்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, செயற்பொறியாளர் சொர்ணக்குமார், தலைமைபொறியாளர் திருச்சிமண்டலம் நீர்வளத்துறை ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் கீழ் காவேரி வடிநிலவட்டம் தஞ்சாவூர் அன்பரசன், செயற்பொறியாளர் அக்னியாறு பட்டுக்கோட்டை திலீபன, உதவிசெயற்பொறியாளர் அக்னியாறுவடிநிலக் கோட்டம் தஞ்சாவூர சண்முகவேல்,உதவிபொறியாளர் சிவக்குமார் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தில் உழவர் குழு அமைத்து தூர்வாரும் பணிகளை கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உழவன் ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கி இப்பணி தொடர்பாக பெறப்படும் ஆலோசனைகள் மற்றும் புகார்கள் 48 மணிநேரத்திற்குள் தீர்வு காண ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

தூர்வாரும் பணிசெய்யப்படும் வாய்கால்களில் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் உடன் அவற்றினை அகற்றிட இதற்கென தனிநில அளவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பணிகளில் ஈடுபடுத்திட போதுமான கனரக இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாகவும், குறித்தகாலத்திற்குள் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணித்தலங்களில் பணிதொடர்பான குறை நிறைகளை தெரிவித்திட பணி மேற்கொள்ளும் உதவிப்பொறியாளர், உதவிசெயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களின் தொடர்பு எண்களை குறிக்கும் அறிவிப்புபலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பணிநடைபெறும் கால்வாய் பகுதிகளுக்குஉட்பட்டசிறுமற்றும் குறு வாய்க்கால்களையும் தூர்வாரிட ஊரகவளர்ச்சிதுறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயப்பணிகளை குறித்த காலத்திற்குள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்,உரம், களைக்கொல்லிகள் கிடைத்திட சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு உரிய விவசாயக் கடன் கிடைப்பதற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டத்திற் குமுன்னர் அரசு கூடுதல் தலைமைசெயலாளர் டாக்டர்.சந்தீப் சக்சேனா ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் பாளையப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாலையா ஏரியின் வரத்து வாய்க்கால் தொலைகல் 1 கி.மீ முதல் 3 கீ.மீ . வரை பாளையப்பட்டி தெற்கு கிராமம் செங்கீரை மூலக்குடி ஏரிவரத்து வாய்க்கால் தொலைகல் 0 க.மீ . முதல் 2 கீ.மீவரை மற்றும் அயோத்திப்பட்டி கிராமம் ஏகாபுரிஏரி வரத்து வாய்க்கால் தொலைகல் 1 கி.மீ . முதல் 2 கி.மீ. வரை தூர்வாரும் பணியை நேரடியாக பார்வையிட்டார். மேலும் இத்தூர்வாரும் பணிகள் குறித்த காலத்திற்குள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டு விவசாய பெருமக்கள் அதன் முழு பயனையும் பெறும் வகையில் நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

Updated On: 27 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!