/* */

இரண்டு மாத தவணைக் கட்டவில்லை டிராக்டர் பறிமுதல்: டிராக்டர் முன்பு படுத்து விவசாயி போராட்டம்

மொத்தம் 12 மாத தவணையில் 8 மாதம் கட்டியுள்ளார். கொரனோ காரணமாக கடந்த இரண்டு மாத தவணைகள் அவரால் கட்ட முடியவில்லை.

HIGHLIGHTS

இரண்டு மாத தவணைக் கட்டவில்லை டிராக்டர் பறிமுதல்: டிராக்டர் முன்பு படுத்து விவசாயி போராட்டம்
X

தவனை கட்டவில்லை என டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள். டிராக்டர் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்குமார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். மூன்று மாதத்திற்கு ஒரு தவணை என 52,000 கட்ட வேண்டும். மொத்தம் 12 மாத தவணையில் 8 மாதம் கட்டியுள்ளார். கொரனோ காரணமாக கடந்த இரண்டு தவணைகளில் அவரால் கட்ட முடியவில்லை, இதனால் வங்கிக்கு சென்று தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று விவசாயி சுரேஷ்குமார் வீட்டில் இல்லாத போது அங்கு வந்து வங்கி ஊழியர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி டிராக்டர் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர். தகவலறிந்து சுரேஷ்குமார் டிராக்டரை துரத்திச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் டிராக்டரை மடக்கிப்பிடித்து டிராக்டர் முன்பு படுத்துக்கொண்டு, டிராக்டரை எடுத்து செல்லாதவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அதிகாரிகளுடன் அவர் இரண்டு மாத தவணை மட்டும்தான் கட்ட வேண்டும் அதற்காக ஏன் டிராக்டர் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர் மக்கள் திரண்டதால் டிராக்டரை விட்டுவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சுரேஷ் குமார் புகார் அளித்துள்ளார். இது குறித்து வங்கியில் சென்று கேட்டபோது கடன் வழங்குவது மட்டும் தான் எங்கள் வேலை என்றும்! கடனை திருப்பி வாங்குவதற்கு திருச்சியை சேர்ந்த அதிகாரிகள்தான் ஈடுபடுவதாகவும், அதனால் இதற்கும் வங்கிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதே வங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டருக்கு தவனை கட்டாத பாலன் என்ற விவசாயை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.

Updated On: 11 Aug 2021 9:45 AM GMT

Related News