/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,315 பேருக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 20,315 -நபர்களுக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,315  பேருக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி
X

தொழில்முனைவோர் திட்டத்தை தொடக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்(பைல் படம்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 20,315 -நபர்களுக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், தொழில் வளர்ச்சியிலும், பொருளாதா ரத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சிபெற்றுள்ளது. சமீபத்தில், நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார் நிலை குறியீடு தரவரிசைகளின் படி, 80.89 புள்ளிகளுடன் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ள தமிழ்நாடு, மின்னணுவியல் ஏற்றுமதியிலும் முதல் இடத்தில் உள்ளது.

மேலும், அதிக எண்ணிக்கையில் தொழிற் சாலைகள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட மாநிலங்களில் முதலிடத்திலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில், அகில இந்திய அளவில், இரண்டாவது இடத்திலும் உள்ளது.இந்தியாவில் தொழில் புரிவதற்கு சிறந்த மாநிலங்களுள் ஒன்றாகவும் தமிழ்நாடு விளங்கி வருகிறது. மேலும், ஏற்றுமதித் தொழில்களுக்கான தயார் நிலைக் குறியீட்டில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

அவ்வழியில், தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் பங்களிப்பு அளிக்கிறது.மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்டஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்ததாவது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 01.05.2021 முதல் 31.11.2023 வரை குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக ரூ.1044.85 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.இயந்திரத் தளவாடங்கள் மீதான முதலீட்டு மானியம் 15% லிருந்து 25% ஆக உயர்வு செய்ததன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் குறு, சிறு தொழில்முனைவோருக்கு ரூ.1044.85 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின் மானியமாக ரூ. 44.48 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 270 படித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1076.96 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.268.99 இலட்சம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 67 பயனாளி களுக்கு ரூ.4579.72 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ. 455.28 இலட்சம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப் பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரால் கடந்த 12.05.2023 முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்புக் கடன் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்என்ற பெயரில் துவங்கப்பட்டு ,நாளது தேதி வரை 138 விண்ணப்பங்கள் ரூ.1064.57 இலட்ச திட்ட மதிப்பீட்டில் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 52 நபர்களுக்குரூ.230.56 இலட்சம் திட்ட மதிப்பீட்டிற்கு கடன் ஒப்பளிப்பு பெறப்பட்டு 3 -பயனாளிகளுக்கு ரூ.15.20இலட்சம் மானியம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் 19259 பொதுப் பிரிவினருக்கும் 1056 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னருக்கும் புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக தொழில் தொடங்க விழைபவர்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கடனுதவி பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின்கீழ்இயங்கிவரும் மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தின் மூலம் சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடனுதவி பெற்று தொழில் துவங்கிய தொழில் முனைவோர் மோகன் தெரிவித்ததாவது: நான் தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் வசித்து வரும் ஒரு விவசாயக் குடும்பத்தை சேர்ந்த நான் தற்பொழுது மாவட்ட தொழில் மையம், அலுவலகத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று மர இழைப்பு பட்டறை ஒன்றினை தொடங்கி சுயதொழில் புரிந்து வருகின்றேன். சுயதொழில் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவாகும். இத்தொழிலின் மூலம் சுமார்1 இலட்சத்து 40 ஆயிரம் ருபாய் மாதாந்திர வருமானம் ஈட்டுகிறேன். 8 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்னால் வழங்கப்படுகிறது. தமிழகஅரசின் இந்த சிறந்ததிட்டத்தின்மூலம்எனக்குசுயதொழில் செய்ய வாய்ப்பளித்த தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசின் குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தின் மூலம் புதிய தலைமுறை தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றுதொழில் துவங்கிய தொழில்முனைவோர் மோட்சசுந்தரி தெரிவித்ததாவது.



நான் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வசித்து வருகிறேன். நான் தற்பொழுது மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தலைமுறை தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம்1 கோடியே 21 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று கயிறு தயாரித்தல் மற்றும் பித்ஒர்க்ஸ் என்ற சுயதொழில் புரிந்து வருகின்றேன். இத்தொழிலின் மூலம்சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாதாந்திர வருமானம் ஈட்டுகிறேன். 35 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளேன். தமிழகஅரசின் இத்திட்டத்தின் மூலம் எனக்கு சுயதொழில் செய்ய வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொகுப்பு- ரெ.மதியழகன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர் மாவட்டம்.

Updated On: 30 Dec 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!