/* */

நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் எந்த தவறும் நடக்கக்கூடாது: உணவு அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் மூன்று லட்சம் மெட்ரிக் டன் கவர்டு செமிகுடோன் கட்டுவதற்கு சுமார் ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்

HIGHLIGHTS

நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் எந்த தவறும் நடக்கக்கூடாது: உணவு அமைச்சர் அறிவுறுத்தல்
X

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கினை  உணவு துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ ஆலிவர் தலைமையில் இன்று (05.08.2022 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், முன்னையம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கினை உணவு நுகர்பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ ஆலிவர் தலைமையில் இன்று (05.08.2022 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் அர. சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், முன்னையம்பட்டி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கப நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உணவுத்துறை சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் சென்னையில் அனைத்துதுறை அலுவலர்களுடன் நடைபெற்றது. .விவசாயிகள்,தாங்கள் உற்பத்திசெய்த நெல்லை, ஒருநெல்மணி கூட சேதாரம் அடையக்கூடாது என்பதுதான். முதலமைச்சருடைய எண்ணமாகும்.

தமிழகம் முழுவதும் 103 திறந்த வெளிசேமிப்பு கிடங்குகள் செயல்பட்டு வருவதை உணர்ந்து அதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற நோக்கத்தில் முதற்கட்டமாக, தமிழகத்தில் மூன்று லட்சம் மெட்ரிக் டன் கவர்டு செமிகுடோன் கட்டுவதற்கு,சுமார் ரூபாய் 300கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை, பிள்ளையார்பட்டி, செல்லம்பட்டி, திட்டக்குடி ஆகிய மூன்று இடங்களில் சுமார், 58 ஆயிரம் மெட்ரிக். டன் சேமித்து வைக்கக்கூடிய வகையில் கிடங்குகள் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளார்ள்.

டெல்டாமாவட்டங்களில் மழையினால் ஏற்பட்டசேதம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுடன் முதலமைச்சர் நேரடியாக கலாய்வு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், மேட்டூர் அணையில், இருந்து திறந்துவிடப்படுகின்ற தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கானொளிக்காட்சி மூலம் பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேசுகையில், நெல் மூட்டைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எல்லா இடங்களிலும் இரவுநேரங்களில் தார்ப்பாய் மூடி பகல் நேரங்களில் அதை திறந்து உலரவைத்து பாதுகாக்க வேண்டும் உரிய ஆட்களை வைத்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.பொதுவாக ஈரப்பதம், 17 சதவீதம் இருக்கலாம் டெல்டா மாவட்டத்தில்14.6 சதவீதம் தான் உள்ளது. விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையங்களை பெறப்படும் நெல்லினை அரவை ஆலைகளுக்கு உடனடியாக அனுப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் பிளக்ஸ் போர்டு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் மாவட்டஆட்சித் தலைவர், நுகர்பொருள் வாணிபக்கழக உயர் அலுவர்கள் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுகள் ஏதேனும் நடந்தால் அந்தஎண்ணில் தொடர்பு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிமைப் பொருட்கள் வெளிமாநிலத்திற்கு கடத்தப்படாமல் நடவடிக்கைஎடுக்கும் வகையில் நுகர் பொருள் வாணிபக் கழகதுறையில் சென்னையிலும் மதுரையிலும் இரண்டுகாவல் கண்காணிப்பாளர்கள் இருந்த நிலையில், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூருக்கு கூடுதலாக தலா ஒரு காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல் புகார் பெட்டிவைக்கப்பட்டு, அதன் சாவி மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. வாரம் ஒருமுறை மாவட்டவருவாய் கோட்டாட்சியர் அல்லது மாவட்டவருவாய் அலுவலர் அந்தபுகார் பெட்டியை திறந்து மனுக்களை எடுத்து அதன் மீதுஉரியநடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுரைவழங்கிஉள்ளார்.

முதலமைச்சர் தலைமையிலான அரசுபொறுப்பேற்ற பிறகு நெல்லுக்கு 1960ரூபாயிலிருந்து, சன்ன ரகத்திற்கு ரூபாய் 100 உயர்த்தப்பட்டுள்ளது . கூடுதல் ஆதாரவிலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதிதான் திறக்கப்படுவதுவழக்கம் இந்தஆண்டுமுன்கூட்டியேமேமாதம் 24 ஆம் தேதிதிறக்கப்பட்டது. குறுவைசாகுபடி முன்கூட்டியே தொடங்கப்பட்டதால்,நெல் அறுவடை செப்டம்பர் மாதமே வந்துவிடும் என்பதால்,பிரதம மந்திரிக்கு கடிதம் எழுதி செப்டம்பர் 1ஆம் தேதியே நெல் கொள்முதல் செய்யஅனுமதிக்க வேண்டும், ஆதாரவிலை உயரத்தி தரவேண்டும் என கேட்டிருந்தார்.

எனவே செப்டம்பர் 1ஆம் தேதிநெல் கொள்முதல் பணிகள் தொடங்கப்படும். இதுகுறித்து சென்னையில் அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி,தேவைப்படக்கூடிய தர்பாய்கள்,கொள்முதல் செய்யக்கூடிய சாக்கு,சணல் தேவையானஅளவு கையிருப்பு இருக்கவேண்டும்.அதேபோல்,விவசாயிகள் காத்திருக்க வேண்டியஅவசியம் இல்லாதவகையில் உரியநடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் தாமதம் இன்றி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

டெல்டா மாவட்டத்திற்கு கூடுதலான திறந்தவெளி நெல் குடோன் தேவையாக உள்ளது இதுகுறித்து ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். விரைவில் கூடுதலான செமிகுடோன்கள் கட்டப்படும். கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வந்தாலும் கொள்முதல் செய்யப்படும். தனியார் பங்களிப்புடன் 12 இடங்களில் நெல் அரவை ஆலைகளை நிறுவுவதற்கு அரசு முடிவெடுத்து 6 ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உணவுமற்றும்உணவுப் பொருள் வழங்கல் துறைஅமைச்சர் அர.சக்கரபாணிதெரிவித்தார்.

இந்தஆய்வின்போதுபோது, சட்டமன்றஉறுப்பினர்கள் துரைசந்திரசேகரன், (திருவையாறு), டி. கே. ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்),தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழகமுதுநிலைமண்டல மேலாளர் மகேஸ்வரி,மாவட்டஊராட்சிதலைவர் ஆர் உஷா புண்ணியமூர்த்தி,வருவாய் கோட்டாட்சியர்ரஞ்சித்,வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 5 Aug 2022 3:00 PM GMT

Related News