/* */

தஞ்சாவூரில் தொழில் முதலீடுகள் மாநாட்டில் 85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொழில் முனை வோர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங் களை வழங்கினார்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் தொழில் முதலீடுகள் மாநாட்டில்  85 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
X

தஞ்சாவூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொழில் முனைவோர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்.

தஞ்சாவூரில் தொழில் முதலீடுகள் மாநாட்டில் 37 பயனாளிகளுக்கு ரூபாய் 14.52 கோடி மதிப்பிலான கடனுதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T) கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் தலைமையில் இன்று (17.12.2023) நடைபெற்றது. இம்மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொழில் முனைவோர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்.

இந்த மாநாட்டில் அனைத்து வங்கிகளின் சார்பில் 37 பயனாளிகள் ரூ.1452.59 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி விழா பேரூரையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அரசு தொழில்முனைவோர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் 3411 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. மக்கள் தொகை 24890 ஆகும். 14 வட்டாரங்களும் 8 தாலுக்காக்களும் 589 கிராம பஞ்சாயத்துக்களும், 22 நகர பஞ்சாயத்துக்களும், 3 நகராட்சிகளும், 2 மாநகராட்சிகளும், 906 வருவாய் கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூலம் மொத்தமாக 37925 தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சிறு நிறுவனங்களில் மொத்தம் 103 உள்ளன.

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடானது நமது மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது மாநாடு ஆகும். இதற்கு முன்பு 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 100 க்கும் மேற்பட்டநாடுகள் பங்கேற்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு (GIM) சென்னையில் ஜனவரி 2024 இல் நடைபெறும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி அதற்கான இலட்சினையும் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை எடுத்துரைத்து மற்றும் தேவையான வசதிகள், வாய்ப்புகளை ஏற்பாடுசெய்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு தொழில் துவங்க ஆர்வமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ளுர் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு தமிழ்நாட்டிற்கு 66 ஆயிரம் கோடி முதலீடுகளை திரட்டவும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரு.1092 கோடிக்கு திட்ட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர்நடவடிக்கைகளால் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3ஆம் இடத்தை பெற்றுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்மூலம் முன்முனை வட்டி மானியம் 35 சதவீதம் அதிகபட்சம் ரு.1.50 கோடி மற்றும் 6 சதவீத வட்டி மானியமும் வழங்க அரசாணை வெளியிட்டு தொழில் துவங்க 10.08.2023 அன்று திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 34 நபர்களுக்கு மானியம் வழங்கி தொழில் துவங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 01.04.2022 முதல் 16.12.2023 வரை 593 நபர்களுக்கு ரு.20.21 கோடி மானியத்துடன்கூடிய வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 85 நிறுவனங்கள் உலக முதலீட்டு மாநாடு 2024 தொடர்பான ரு.1675.66 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பபந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 4629 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு-2024 சென்னையில் வருகின்ற ஜனவரி திங்கள் 07 மற்றும் 08 ஆகிய நாட்களில் நடைபெற வுள்ளது. தஞ்சாவூருக்கு ரூ.1092 கோடி திட்ட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. உலக முதலீட்டார்கள் மாநாடு 2024 இல் தங்கள் நிறுவனங்களையும் இணைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவும். இதன்மூலம் நேரடிமற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் அதிகமாகும். இதனை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தினை சிறந்த தொழில் மாவட்டமாக மாற்றி பயனடையுமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். பின்னர், மேலவஸ்தாசாவடியில் டைடல் பார்க் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இம்மாநாட்டில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்) தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சு.க.முத்து செல்வம், NIFTEM-T இயக்குநர் பழனிமுத்து, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வீ.மணிவண்ணன்,

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் வி.நாகேஸ்வரராவ், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ஆர்.நடேஷ்குமார் , கனரா வங்கி கோட்ட மேலாளர் எம்.என்.ராம்தாஸ் மூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி பிரதீப் கண்ணன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் திரு.பிரகாஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் கா.நெல்சன், சிட்கோ கிளை மேலாளர் து.ஆனந்த், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கு.விஜயகுமார் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர்.



Updated On: 17 Dec 2023 3:00 PM GMT

Related News