/* */

தஞ்சாவூரில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்தப் பணிகள் ஆய்வு

தஞ்சாவூரில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்தப் பணிகள் ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைசாகுபடி ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வேளாண்மைமற்றும் உழவர் நலத்துறைஅமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறைஅமைச்சர் ஐ. பெரியசாமி , உணவுமற்றும் உணவுபொருள் வழங்கல் துறைஅமைச்சர் அர.சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுசூழல்-காலநிலைமாற்றத்துறைமற்றும் இளைஞர் நலன்,விளையாட்டுமேம்பாட்டுதுறைஅமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி .செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேளாண்மைமற்றும் உழவர் நலத்துறைவேளாண்மைஉற்பத்திஆணையர் மற்றும் அரசுசெயலர் .சி .சமயமூர்த்தி ,தமிழ்நாடுவேளாண்மைபல்கலைக்கழகம் துணைவேந்தர் (கோவை) முனைவர் வெ.சீதாலட்சுமி, வேளாண்மைதுறை இயக்குநர் ஆ. அண்ணாதுரை,வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை எஸ். நடராஜன் ,மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தலைமை வகித்து பேசியதாவது: முதலமைச்சர் மேமாதம் 24ஆம் தேதியில் மேட்டூர் அணை திறந்ததைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் குறுவைநெல் சாகுபடிதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மேற்கொண்டு வரும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், குறுவைசாகுபடி ஆயத்தப் பணிகள் குறித்தஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், கடலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவேரிநதிநீர் பாயும் சிலபகுதிகளிலும் இயல்பாக 3.230 இலட்சம் ஏக்கரில் குறுவைநெல் சாகுபடிமேற்கொள்ளப்படும்.

இந்தஆண்டுபருவமழைக் குமுன்பே டெல்டா மாவட்டங்களில் 80 கோடிரூபாய் மதிப்பீட்டில் 4,964 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர் வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு வழக்கமாக,மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படக் கூடிய நாள் ஜுன் 12 –ம் தேதிஎன்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜுன் 12 –ம் தேதிக்கு முன்பே அதாவது மே மாதம் 24 –ம் தேதியேநீர் திறந்துவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே. சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்ட வரலாறு இதுவரையில் கிடையாது . இதுதான் முதல் முறை. இந் தவரலாற்று சாதனையானது இந்த ஆண்டில்தான் நிகழ்ந்திருக்கிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்தஆண்டைவிடகுறுவையில் 5.2 இலட்சம் ஏக்கரும் சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடிபரப்புஉயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே துவக்கப்படுவதால் வடகிழக்கு பருவ மழைகாலத்தில் சம்பா பயிர்கள் வெள்ளநீரில் மூழ்காமல் காக்கப்படும். மேலும் நிலத்தடிநீர் மட்டம் உயர்வதால் மாற்றுப் பயிர் வகைகளும் அதிகஅளவில் சாகுபடிசெய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

வேளாண் பெருமக்களின் நலன்கருதி இந்தஆண்டும் ரூபாய் 61 கோடிமதிப்பிலானகுறுவைதொகுப்புதிட்டம் செயல்படுத்தப்படும். இந்ததிட்டத்தின் மூலம் 3 லட்சம் உழவர்கள் பயன் பெறுவார்கள். வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கோடுஒருலட்சத்துதொன்னூறாயிரம் (1,90,000) ஏக்கர் பரப்பளவிற்குயூரியாபொட்டாஷ் ஆகியஉரங்களைஅடங்கியதொகுப்பு 47 கோடிரூபாய் ஒதுக்கீடுமானியவிலையில் வழங்கப்படும்.

வேளாண் விரிவாக்கமையங்கள் மூலம் 2400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 விழுக்காடுமானியத்தில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் வேளாண் பொறியியல் துறை மூலம் உள்ளிட்ட 237 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடுமானியத்தில் ரூபாய் 6 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இதன் மூலமாககடந்த ஆண்டு சாதனை அளவைவிட இந்த ஆண்டும் அதிகபரப்பளவில் சாதனை எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்புகுறுவைப் பருவத்தில் 3.50 இலட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடிமேற்கொள்ள திட்டமிடப்பட்டு, குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகியகால நெல் இரக விதைகள், இரசாயனஉரங்கள், உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டஉரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவு இருப்பில் வைத்து, நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு, விரைவாகநடவுப் பணியை மேற்கொள்வதற்கும் வேளாண்மைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளில்,குறுவைநெல் சாகுபடிக்கு 7060 மெட்ரிக் டன் நெல் விதைகள் தேவைப்படுகிறது. இதுவரை,வேளாண்மை விரிவாக்கமையங்கள் மற்றும் தனியார் விற்பனைநிலையங்கள் மூலம், 3,547 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், 999 மெட்ரிக் டன் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், 3,615 மெட்ரிக் டன் விதைகள் தனியார் விற்பனை நிலையங்களிலும், ஆக மொத்தம் 4,691 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

அதேபோன்று,குறுவைதொகுப்புத் திட்டத்திற்குதேவையானஉரங்கள் 22,800 மெட்ரிக் டன் இரசாயனஉரங்களில், 10,916 மெட்ரிக் டன் இரசாயனஉரங்கள் அனைத்துதொடக்கவேளாண் கூட்டுறவுகடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்புஉள்ளது. மேலும், இரசாயனஉரங்கள், மாவட்ட வாரியான மாதாந்திர தேவை ஒதுக்கீட்டின் படி,தொடர்ந்து உரநிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. 835 நெல் நடவு இயந்திரங்கள் மூலம் டெல்டா மாவட்டங்களில் நெல் நடவுப்பணிவிரைவாகமேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடைமடைப் பகுதிகளுக்கும் பாசனநீர் விரைவில் சென்றடையும் வகையில் வாய்க்கால்கள் தூர் வாரும் பணிகள் விரைவாகநடைபெற்றுவருகின்றன.

பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில்,கடைமடைப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்புப் பணி மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே,நடப்பாண்டில் குறுவைநெல் சாகுபடி இலக்கான 3,50,000 ஏக்கரைவிட கூடுதலானபரப்பளவில் சாகுபடிமேற்கொள்ளப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில்,டெல்டா மாவட்டவிவசாயிகளுக்கு தேவையான அனைத்து இடுபொருட்களையும் உரியகாலத்தில் விநியோகம் செய்திடவும்,வேளாண் விரிவாக்கச் சேவைகளை வழங்குமாறும்,சிறப்பு தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் வேளாண்மை,வேளாண் பொறியியல் மற்றும் பொதுப்பணித் துறைஅலுவலர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்டங்களைச் சேர்ந்தவிவசாயசங்க பிரதிநிதிகளும், முன்னோடி விவசாயிகளும் கலந்து கொண்டார்கள். மேலும் கால்நடைகள்,மீன்வளம் போன்ற விவசாய தொடர்புடைய தொழில்களையும், விவசாயநிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்படவேண்டும்,ஒருங்கிணைந்தபண்ணைமுறையைசெயல்படுத்தவேண்டும், மூடப்பட்டகரும்பு ஆலைகளைத் திறந்து கரும்புசாகுபடியை ஊக்குவிக்கவேண்டும், காய்கறிகளுக்கான குளிர்பதனகிடங்குகள் அமைக்கப் படவேண்டும். நடவு இயந்திரம் உழவு இயந்திரம் அறுவடை இயந்திரம் அதிகஅளவில் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். விவசாயத்தில் பெண்களும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு சலுகைகள் கிடைக்கவேண்டும். புதியவேளாண்மை கல்லூரிகள்,ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க வேண்டும்,விவசாயத்தை பள்ளி கல்வியில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பதிவுசெய்தனர்.

பின்னர் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத விவசாயிகள் தங்கள் கருத்துகளை மனுவாகவும், மின்னஞ்சல் மூலமாகவும், உழவன் செயலி மூலமாகவும் தெரிவித்தால் உற்பத்தியை பெருக்கவும், உழவர்கள் வாழ்வாதாரம் உயரவும் அனைத்து கருத்துகளும்,பரிந்துரைக்கப்படும் என்றர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைஅமைச்சர் எம்.ஆர்.கேபன்னீர்செல்வம்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்றஉறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (தஞ்சாவூர்),எஸ்.ராமலிங்கம் (மயிலாடுதுறை), மாநிலங்களவைஉறுப்பினர்கள்சி.சண்முகம் ,.எஸ்.கல்யாணசுந்தரம்,தமிழகஅரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ,கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என். ஓ. சுகபுத்ரா,சட்டமன்றஉறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு),டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை(பட்டுக்கோட்டை), பூண்டிகலைவாணன் (திருவாரூர்), நிவேதாஎம் முருகன்; (பூம்புகார்),வி. பி. நாகைமாலி(கீழ்வேளூர்), பன்னீர்செல்வம் (சீர்காழி),தஞ்சாவூர் மாநகராட்சிமேயர் . சண்.ராமநாதன்,கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன்,வேளாண்மை இணை இயக்குனர் அ. ஜஸ்டின்,தஞ்சாவூர் மாநகராட்சிதுணைமேயர் .அஞ்சுகம் பூபதி,விதைச் சான்றுமற்றும் அங்கக சான்றளிப்புத் துறை இயக்குநர் மு.சுப்பையா, மாவட்டஊராட்சிதலைவர்.ஆர். உஷா புண்ணியமூர்த்தி மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகெண்டனர்.

Updated On: 8 Jun 2022 6:30 AM GMT

Related News