/* */

விளிம்பு நிலை மக்கள் மேம்படுத்துதல் திட்டம்: வீடில்லாதவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா

தஞ்சாவூர் வட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களை நேரடியாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விளிம்பு நிலை மக்கள் மேம்படுத்துதல் திட்டம்:  வீடில்லாதவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா
X

 மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் விளிம்புநிலைமக்கள் மேம்படுத்துதல் தொடர்பாக கடந்த ஒரு வருடமாக மாவட்டஆட்சியரால் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வீட்டுமனைப்பட்டா இல்லாதவர்களுக்கு நேரடிபேச்சுவார்த்தை மூலம் மற்றும் அரசுபுறம்போக்கு நத்தம் - புஞ்சைதரிசுகளம் புறம்போக்குகளில் நத்தமாக வகைப்பாடு செய்து 21.08.2022 வரை இலவசவீட்டுமனைப்பட்டா 613 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இதனைத் தொடர்ந்து சாதிச்சான்றிதழ் 1863 நபர்களுக்கும், முதலமைச்சர் காப்பீடு திட்டஅட்டை 617 நபர்களுக்கும்,குடும்ப நலவாரிய அட்டை 818 நபர்களுக்கும், திறன்மேம்பாட்டுபயிற்சி 889 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் வட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களை நேரடியாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யப்பட்டு 7 நபர்களுக்கு பிள்ளையார்பட்டி கிராமம் புல எண்.115 யு 7-ல் தரிசுபுறம்போக்கு அரசு தீர்வை ஏற்படாத தரிசுபுறம் போக்கு தலா 1 ஏர்ஸ் வீதம் 7 நபர்களுக்கு தலா ஒரு ஏர்ஸ் வீதம் 7 ஏர்ஸ் இலவச வீட்டு மனை பட்டா, பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் தலைமையில் 22.08.2022 அன்று வழங்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ 7 இலட்சம் ஆகும். மேற்கண்ட தகவல்களை மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்

Updated On: 23 Aug 2022 11:00 AM GMT

Related News