/* */

தஞ்சை மாவட்டத்தில் குறுவை தொகுப்பு - 15 கோடி ஒதுக்கீடு, கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்திற்காக 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் குறுவை தொகுப்பு - 15 கோடி ஒதுக்கீடு, கலெக்டர் தகவல்
X

தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ( பைல் படம்)

இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை டெல்டா மாவட்ட பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இதனையடுத்து 16ஆம் தேதி கல்லணையிலிருந்து, டெல்டா மாவட்ட பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு 61.09 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து தஞ்சை மாவட்டத்திற்கு 15 கோடி ரூபாய் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் 50 சதவீத மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் 100 சதவீத மானியத்தில், பசுந்தாள் உர விதைகள், தக்கைப்பூண்டு போன்றவற்றை வேளாண் விரிவாக்க மையங்களில் வழங்கப்பட உள்ளதாகவும்,

மேலும் தொடக்க வேளாண்மை வங்கிகள் மூலம் ஒரு ஏக்கருக்கு இரண்டு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

தேவைப்படக்கூடிய விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் அடங்கல் சான்றிதழ், ஆதார் அட்டை, இவற்றுடன் உழவன் செயலி மூலமாகவோ, வேளாண் விரிவாக்க மையங்களிலும் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Jun 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...