/* */

தேர் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட தனி நபர் குழுவிசாரணை தொடக்கம்

தேர்விபத்து குறித்து விரைவில் தமிழக அரசிடம் 2 அறிக்கைகள் சமர்பிக்கவுள்ளதாக வருவாய் துறை செயலாளர் குமார்ஜெயந்த் பேட்டி

HIGHLIGHTS

தேர் விபத்து  தொடர்பாக அமைக்கப்பட்ட தனி நபர் குழுவிசாரணை தொடக்கம்
X

தனிநபர் குழு இன்று தஞ்சை வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா ஆகியோரிடம்   ஆய்வு நடத்தினர்

தஞ்சை களிமேடு தேர் விபத்தில் 11 பேரின் உயிரை பலியான சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனி நபர் குழு விபத்து நடைபெற்ற பகுதிகளில் விசாரணையைத் தொடங்கியது.

தஞ்சாவூர் அடுத்த களிமேட்டில் தேர்திருவிழாவின் போது, உயரழுத்த மின்கம்பியில் உரசி ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயிந்த் தலைமையில் தனி நபர் விசாரணை குழுவை அமைத்தது. இதையடுத்து தனிநபர் குழு இன்று தஞ்சை வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அதிகாரிகளுடன் விபத்து குறித்து கேட்டறிந்தார். இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் மின்துறை, நெடுஞ்சாலை துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிதுறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மருத்துவர்கள் குழு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். ஒவ்வொரு துறை அதிகாரிகளிடமும் விபத்து குறித்த தகவல்களை முதன்மைச் செயலாளர் கேட்டறிந்தார். பின்னர் விபத்து நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும் விழாக்குழு, கமிட்டியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் வழங்கி முழு விசாரணை நடைபெற இருக்கிறது.

பின்னர் குமார்ஜெயந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரண்டு நாட்கள் முழுமையாக விசாரணை செய்ய உள்ளோம். மக்கள் தன்னை நேரில் சந்தித்து விபத்து குறித்து தகவல் தெரிவிக்கலாம்.விரைவில் இந்த விபத்து குறித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். முதல் அறிக்கையில், இந்த விபத்து எப்படி நடந்தது என்றும், இரண்டாவது அறிக்கையில் இனிமேல் விபத்து நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமர்ப்பிபோம் என்றார் அவர்.

Updated On: 30 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!