/* */

மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து தஞ்சை ரயில் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து  தஞ்சை ரயில் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம்
X

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து தஞ்சை ரயில் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கம்  

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்தும், அதற்கான திட்ட அறிக்கையை பெற்றுள்ள நீர்வளத்துறை அமைச்சகத்தை கண்டித்தும், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் தஞ்சை ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிஆர்.பாண்டியன் கூறியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க பாதுகாக்க குடியரசுத் தலைவருக்கு பொறுப்பு உள்ளது. மேகதாது அணை கட்டினால் 32 மாவட்டங்கள், சென்னை உட்பட 11 மாநகராட்சிகளில் உள்ள 5 கோடி மக்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாகும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உருவாகும். உடனடியாக மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை போட வேண்டும். தமிழக அரசு இனிமேல் பிரதமர் மோடியையும், நீர்வளத் துறை அமைச்சரையும் பார்ப்பதினால் எந்த பயனும் இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக தனது செயல்பாட்டை மாற்றி, அரசியல் ரீதியாக அழுத்தத்தை குடியரசுத் தலைவர் மூலமாக பிரதமருக்கு கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. குறுவை, சம்பா பயிர்கள் கருகி விவசாயிகள் சாவதை விட இந்த கொரோனாவால் உயிரிழப்பதை மேல் எனவும், எங்கள் உயிர் மேகதாதுவிற்காக இழக்கவும் தயார் என அவர் தெரிவித்தார்.


Updated On: 15 July 2021 4:45 AM GMT

Related News