திமுக நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு

திருவையாறு திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரன் ஆதரவாளர் முரசொலிக்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திமுக நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு
X

தஞ்சை திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும் துரை சந்திரசேகரன் ஆதரவாளருமான முரசொலிக்கு சொந்தமான மூன்று இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காகவும் பணம் கொடுக்க அரசியல் கட்சிகள் தயாராக இருப்பதாக கூறி பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

தஞ்சை வருமானவரித் துறை அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின்படி திருச்சி வருமான வரித்துறை அதிகாரி பிரேம் கமல் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இரண்டு இன்னோவா வாகனங்களில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும் திருவையாறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரன் ஆதரவாளருமான முரசொலிக்கு சொந்தமான தஞ்சை அருளானந்த நகர் இல்லம், தஞ்சை சீனிவாசபுரம் அருகே உள்ள மல்லிகை புறத்திலுள்ள இல்லம், திருவையாறு தொகுதிக்குட்பட்ட தென்னங்குடியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 3 இடங்களில் 5 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பெரிய அளவில் தொகை எதுவும் சிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

அதனால், தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அளித்து சோதனை முடித்து கொண்டு சென்றனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தஞ்சையிலும் சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Updated On: 2 April 2021 12:45 PM GMT

Related News