/* */

நாய்கள் கண்காட்சி: நாய்கள் வளர்ப்போர் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

Nattu Naaigal-தஞ்சையில் முதலாவதாக வரும் 11.03.22 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 6 மணி வரை மிருகவதை தடுப்புச் சங்க வளாகத்தில் நடைபெறும்

HIGHLIGHTS

நாய்கள் கண்காட்சி: நாய்கள் வளர்ப்போர்  பங்கேற்க ஆட்சியர்  அழைப்பு
X

பைல் படம்

Nattu Naaigal-தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை அருகில் SPCA சார்பில் (மிருகவதை தடுப்பு சங்கம்) சங்கத்திற்கு சொந்தமான மாதாக்கோட்டையில் உள்ள செல்லப் பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் மாபெரும் நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம், மாதாக்கோட்டை ஊராட்சியில் செல்லப் பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் பராமரிப்பு மைய வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடத்துவது குறித்த விளம்பர துண்டு பிரசுரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று (01.03.2023) வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை அருகில் SPCA சார்பில் (மிருகவதைதடுப்புசங்கம்) சங்கத்திற்கு சொந்தமான மாதாக்கோட்டையில் உள்ள செல்லப்பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் நாய்கள் கண்காட்சி தஞ்சையில் முதல் முறையாக எதிர் வரும் 11.03.22 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 6 மணி வரை மிருகவதை தடுப்புச் சங்க வளாகத்தில் நடைபெறும்.

இந்தகண்காட்சியுடைய நோக்கம் நமது நாட்டு வகை நாய் இனங்களை பாதுகாப்பதும்,செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் சித்திரவதையை தடுப்பதும்,செல்லப் பிராணிகள் மீதான அன்பை வெளிப்படுத்திடவும் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் பங்கேற்பதற்கு நாய் ஒன்றுக்கு ரூபாய் 250- பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சியில் பங்கு பெறும் நாய்களுக்கு மிருகவதை தடுப்புச் சங்கத்தின் சார்பில் ராபீஸ் தடுப்பூசி கட்டணம் இல்லாமலும், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். கண்காட்சியில் பங்கேற்க விரும்புவோர் 9843226695 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், நாட்டு இன நாய்களை வளர்க்கும் ஆர்வத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதே கண்காட்சியின் நோக்கம், என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சாவூர் ஒன்றியம், மாதாக்கோட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்படும் செல்லப் பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் பராமரிப்பு மைய வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கவின் மிகு தஞ்சை இயக்கம் சார்பில் பனை மரக்கன்று நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மேற் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் முனைவர். நர்மதா கால்நடைத் துறை மண்டல இணை இயக்குனர் மரு.க.தமிழ்செல்வம், உதவி இயக்குனர் சையத் அலி, தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .பிரபாகரன், மதியரசன், வட்டாட்சியர் சக்திவேல், SPCA, முனைவர். சதீஷ்குமார், ஆடிட்டர் ராகவி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகா மைக்கேல், முத்துக்குமார், நாஞ்சிக்கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் சத்யராஜ், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 4:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...