/* */

ஏப்.29-ல் தஞ்சையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்

தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் நாள்கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

ஏப்.29-ல் தஞ்சையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022 ஏப்ரல் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29.04.2022 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டஆட்சியரகம் பெருந்திட்டவளாகம் கீழ்தளத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டஅரங்கில் மாவட்டஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் புதியதொழில்நுட்பங்கள் குறித்துவிவசாயிகளுக்கு திட்டவிளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாயசங்கபிரதிநிதிகள் அனைவரும் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபகழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம், போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவிக்கவிரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாயசங்கபிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9.00 மணிமுதல் 10.00 மணிவரை கணினியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று பின் மனுக்களை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கொரோனாதொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயபெருமக்கள் சக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறு மாவட்டஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!