/* */

பாபநாசம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த ஆய்வு கூட்டம்

பாபநாசம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாபநாசம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த ஆய்வு கூட்டம்
X

பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது.

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்துதல் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமை வகித்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுபதி கோவில், பண்டாரவாடை, பெருமாள் கோயில், திருவைகாவூர், கூனஞ்சேரி, சோமேஸ்வரபுரம் ஆகிய ஆறு ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பிற திட்டங்கள் மற்றும் பல்வேறு இதர துறைகளில் திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படும் பணிகள் குறித்தும் விளக்கிப் பேசினார்கள்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆறு ஊராட்சிகளில் நீர்நிலைகள் புனரமைத்தல், கிராமங்களில் குக்கிராமங்களில் தெருக்கள், வீதிகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சமத்துவ சுடுகாடு, இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல், பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொது பயன்பாட்டுக்கு அமைப்புகளை உருவாக்குதல், பசுமை மற்றும் சுத்தமான கிராமம், வாழ்வாதாரம் மற்றும் சந்தை படுத்துதல் வசதிகளை ஒருங்கிணைத்தல் ஆகிய திட்ட பணிகளை மேற்கொள்வது என இந்த ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 April 2022 4:41 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!