/* */

சாலை ஆக்கிரமிப்பை மீட்டுத்தரக் கோரி மனு

சாலை ஆக்கிரமிப்பை மீட்டுத்தரக்  கோரி மனு
X

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே மேல உளூர் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் சாலையின் ஆக்கிரமிப்பை மீட்டுத்தரக் கோரி, மாவட்ட செயலாளர் தங்க.முருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் ஒரத்தநாடு தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள மேல உளூர் கிராமத்தில் சுமார் 500 மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீசன், அவரது மகன்களான ஜெயப்பிரகாஷ், பழனிநாதன் ஆகியோர் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விவசாய இடத்திற்கு பயன்படுத்திய பழஞ்சாலை என்ற சாலையை ஆக்கிரமிப்பு செய்து, அப்பகுதி மக்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருவதால், பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர், தங்க.முருகானந்தம் தலைமையில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரத்தநாடு வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் விவசாயிகளை திரட்டி, வட்டாட்சியர் அலுவலகங்களில் உண்ணாவிரதம் இருப்போம் என எச்சரித்துள்ளனர்.

Updated On: 24 Jun 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’