/* */

ரூ.100 கோடி நிலுவைத் தொகை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.100 கோடி நிலுவைத் தொகையை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

ரூ.100 கோடி நிலுவைத் தொகை வழங்கக் கோரி  கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பாக நடந்த   ஆர்ப்பாட்டம்  

ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ.100 கோடி நிலுவைத் தொகை உடனடியாக வட்டியுடன் வழங்க வேண்டுமென வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பாக ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கரும்பு விவசாயி உமையாள்புரம் உதயகுமார் தலைமை வகித்தார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு அரவைக்காக கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ.100 கோடி நிலுவைத் தொகை உடனடியாக வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகத்தினர், வங்கி அதிகாரிகளின் துணையோடு ரூ.500 கோடி வரை போலியாக கடன் பெற்றுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, ஆலை நிர்வாகத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் கையில் கரும்பு, தேசிய கொடியுடன் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jan 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...