/* */

திமுக பெண் கவுன்சிலர் தந்தை கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

தி.மு.க. பெண் கவுன்சிலர் தந்தை கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

HIGHLIGHTS

திமுக பெண் கவுன்சிலர் தந்தை கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது
X

கும்பகோணம் மாநகராட்சி, தி.மு.க., பெண் கவுன்சிலர், தந்தை கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் அப்துல் ரஜாக் (63). ராஜகிரியில் துணிக்கடை நடத்தி வந்தார். மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மகள் ஹதீஜா பீபி கும்பகோணம் மாநகராட்சி 3வது வார்டு தி.மு.க.கவுன்சிலராக உள்ளார்.

கடந்த 6ம் தேதி இரவு அப்துல் ரஜாக், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வந்தனர். கொலையாளிகளை பிடிப்பதற்கு 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் அகரமாங்குடியில், சந்தேகத்திற்கிடமாக சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், அய்யம்பேட்டையை சேர்ந்த விஷ்வா, 18, தராசுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மெட்டூரில் கடந்த ஏப்.9ம் தேதி நடந்த திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் உள்ள சூர்யா (26) என்பவருடன் சேர்ந்து அப்துல் ரஜாக் தனிமையில் இருப்பதை அறிந்து மூவரும் திருட திட்டமிட்டு, அவரது வீட்டிற்கு சென்ற போது, அப்துல் ரஜாக் கூச்சலிட, அவரை இறுக்கி பிடித்ததில் மூச்சுதிணறி இறந்தார். அங்கிருந்து 24 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 5 பவுன் நகையை திருடி, சூலமங்கலத்தை சேர்ந்த ராஜ செல்வம் (29) என்பவரிடம் நகைகளை அடமானம் வைத்து தெரிய வந்தது. இதையடுத்து அய்யம்பேட்டை போலீசார், விஸ்வா, ராஜ செல்வம், 17 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 17 April 2022 3:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...