/* */

மோகூர் கிராமத்தில் உழவர் வயல் தின விழா

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார மோகூர் கிராமத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மோகூர் கிராமத்தில் உழவர் வயல் தின விழா
X

மோகூர் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டார மோகூர் கிராமத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது. கூட்டத்தில் மோகூர் கிராமத்தை சார்ந்த நூறு விவசாயிகள் கலந்து கொண்டனர் . வேளாண்மை துணை அலுவலர் அன்புமணி வரவேற்புரை வழங்கினார் .

கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி அறிவுரையின்படி தேவையற்ற மின் பயன்பாட்டினை தவிர்த்திடுமாறும் , தொடர்ந்து ஒரே பயிர் சாகுபடி செய்யும் முறைகளைத் தவிர்த்து நெல்லுக்குப் பின் உளுந்து , எண்ணெய் வித்து பயிர்கள், சிறு தானிய பயிர்கள் ஆகியவற்றினை மாற்றி மாற்றி சாகுபடி செய்வதனால் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.

தண்ணீர் பயன்பாட்டினை மேம்படுத்தும் விதமாக தற்சமயம் அரசால் வழங்கப்படும் சிறு விவசாயிக்கான 100 சத மானியம் மற்றும் பெரிய விவசாயிக்கான 75% மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தில் உள்ள நன்மைகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்மை அலுவலர் இளங்கோவன் கேட்டுக்கொண்டார்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பேராவூரணி துறைசெல்வம் பேசுகையில், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடம் நேரடியாக காண்பித்து சாகுபடி தொழில்நுட்பத்தினையும் எடுத்துக் கூறினார். அவர்களது உற்பத்தியாளர் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள உலர் கூடாரம் அமைத்தல் மற்றும் அதன் மூலம் மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்து அவர் தெரிவித்தார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகிதா பேசுகையில், தென்னைக்கு உரமிடுதல் மற்றும் பூச்சி மற்றும் நோய் கண்டறிதல் மற்றும் இயற்கை முறையில் கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும் தேவைக்கேற்ப உர பயன்பாட்டினை பயன்படுத்துமாறும் மண்வள அட்டையில் அடிப்படையில் உரத்தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

உழவர் வயல் தின விழாவில் நெல் மதிப்பு கூட்டு பொருள்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானிய வகைகள் மேலும் உயிர் உரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பயிற்சி நிறைவாக வேளாண்மை உதவி அலுவலர் பூமிநாதன் விவசாயிகளுக்கு நன்றி கூறினார்.

பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜூ மற்றும் அய்யாமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 22 Jun 2023 5:51 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!