/* */

தென்காசியை அடுத்த ஊத்துமலை பகுதியில் நிரம்பாத குளங்கள்: விசாயிகள் கண்ணீர்

தொடர் மழையால் தென்காசியில் நிரம்பி வழியும் அணைகள். ஊத்துமலை பகுதியில் நிரம்பாத குளங்கள் விவசாயிகள் கண்ணீர்.

HIGHLIGHTS

தென்காசியை அடுத்த ஊத்துமலை பகுதியில் நிரம்பாத குளங்கள்: விசாயிகள் கண்ணீர்
X

ஊத்துமலை பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

தென்தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உள்ள சூழ்நிலையில் ஊத்துமலை பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.இதனால் ஊத்துமலை பகுதி விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோல் தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி விவசாய பயன்பட்டிற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும்.

இந்த சூழ்நிலையில் தென்காசி மாவட்டம் ஊத்துமலை மற்றும் அதை சுற்றி உள்ள குறிச்சாம்பட்டிபெரியகுளம், சின்னகுளம், ரதமுடையார்குளம், ஊத்துமலை பெரியகுளம், காவலா குறிச்சிகுளம், காடுவெட்டிகுளம், வாடியூர் குளம், மருதையாபுரம்குளம், அச்சங்குட்டம்குளம், பரங்குன்றாபுரம் குளம், அருணாசலபேரிகுளம் கண்டையன்குளம், குட்டை குளம் மற்றும் ஊத்துமலை சுற்றியுள்ள கிராம பகுதியில் உள்ள 25 க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இல்லாமல் குட்டையாக காட்சியளிக்கிறது.

இதை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் மற்றும் விவசாயிகள் ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்தும் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லைை. பெயரளவிற்கு பொதுப்பணித்துறை செயல்படுவதால் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து உபரிநீர் யாருக்கும் பயனில்லாமல் கடலில் கலக்கிறது. ஆனால் விவசாயிகள் நிலைமை அந்தோ பரிதாபம் என்ற நிலையில் உள்ளதாக விவசாயிகள் தங்களது குமுறலை தெரிவித்தனர்.

ரெட்டை குளம் கால்வாய் திட்டம்: இதுகுறித்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் மற்றும் தென்காசி மாவட்டம் 10வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன் ஆகியோரிடம் கேட்டபோது கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு விவசாத்தை பாதுகாக்க எந்த விதமான திட்டங்களையும் செயல்படுத்த வில்லை. திமுக ஆட்சி வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் ரெட்டை குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற 52 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிதி குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரெட்டை குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு ஊத்துமலை மற்றும் அதை சுற்றி உள்ள கிராம பகுதியில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அனைத்து குளங்களும் நிரம்ப நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர்.

Updated On: 6 Dec 2021 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...