/* */

சுரண்டையில் புதியதாக இரண்டு நகர பேருந்து வழித்தடங்கள்: எம்எல்ஏ., துவக்கம்

சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் - பாவூர்சத்திரம் ஆகிய வழித்தடத்தில் 2 நகர பேருந்துகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

சுரண்டையில் புதியதாக இரண்டு நகர பேருந்து வழித்தடங்கள்:  எம்எல்ஏ., துவக்கம்
X

நகரப் பேருந்துகளை புதிய வழித்தடத்தில் தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பாவூர்சத்திரம் விவசாயம், வர்த்தகம் நிறைந்த பகுதியாகும். மேலும் சுந்தரபாண்டியபுரம், மேலபாவூர்வூர், திருச்சிற்றம்பலம் போன்ற பகுதிகளில் இருந்து கேவலமான பள்ளி குழந்தைகள் சுரண்டை மற்றும் பாவூர்சத்திரம் பகுதிகளில் சென்று படித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளுக்கு ஒரு சில நகரப் பேருந்துகளே இயக்கப்பட்ட நிலையில், சுரண்டை மற்றும் பாவூர்சத்திரம் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இன்று சுரண்டை பாவூர்சத்திரம் வழித்தடத்தில் ஒரு பேரூந்தும், தென்காசியில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக மேலப்பாவூர் செல்லும் நகர பேருந்து பாவூர்சத்திரம் வரை சென்று வருவதற்கும் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

இதனை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திமுக மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் , ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், திவான் நகர தலைவர்கள் ஜெயபால், மாடசாமி ஜோதிடர் மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன் திருநெல்வேலி போக்குவரத்து பணிமனை துணை மேலாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Aug 2023 5:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு