/* */

விரைவில் புதிய கலெக்டர் ஆபீஸ் முதல்வரால் திறக்கப்படும்:சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தகவல்

tenkasi new collectorate building will open by cm தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் ஆபீஸ் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.இந்த வேலைகளை இன்னும் 4 மாதத்திற்குள் முடிந்து முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

விரைவில் புதிய கலெக்டர் ஆபீஸ் முதல்வரால் திறக்கப்படும்:சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு தகவல்
X

 சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் செய்தியாளரை சந்தித்தார். 

tenkasi new collectorate building will open by cm

தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 400 கோடிக்கு மேல் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரூ120கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்னும் 4மாதத்தில் தமிழக முதல்வரால் திறக்கப்படும் என சட்டப்பேரவை மதிப்பிட்டு குழு தலைவர் தெரிவித்தார்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா்அன்பழகன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ரவிச்சந்திரன் முன்னிலையில் பேரவைக்குழு உறுப்பினா்கள் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று அனைத்துதுறை அதிகாரிகள், பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனையில் மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தென்காசி புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ரூ400 கோடிக்கு மேல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் ரூபாய் 120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் இன்னும் 4மாதத்தில் தமிழக முதல்வரால் திறக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Updated On: 19 Aug 2023 6:07 AM GMT

Related News