/* */

தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி மனு அளித்த மாணவர்கள்

தெரு நாய் தொந்தரவை கட்டுப்படுத்தக்கோரி, தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாணவர்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி மனு அளித்த மாணவர்கள்
X

கோப்பு படம் 

தென்காசி அருகே, மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ காலனி மற்றும் பாரதி நகரில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக அலைந்து திரிகின்ற்னா. இதனால், தங்களால் பள்ளி மற்றும் டியூஷன் செல்ல அச்சமாக இருப்பதாகவும், தெருக்களில் கடைகளுக்கும் விளையாடுவதற்கும் கூட செல்ல முடியவில்லை என்றும் அப்பகுதி மாணவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், மேலகரம் என்.ஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்த ராம் சூர்யா, பரத்நிமலன், ஆண்ட்ரினோ ஆகிய மூன்று பள்ளி மாணவர்களும், இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாளில், இதுதொடர்பாக மனு அளிக்க வந்திருந்தனர்.

மக்கள் குறை தீர்க்கும் நாளில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா, பள்ளி மாணவர்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மேலகரம் பேரூராட்சிக்கு தகவல் அளித்து, உடனடியாக தெருநாய்களின் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Updated On: 1 Nov 2021 1:15 PM GMT

Related News