/* */

தென்காசி மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

இலங்கை தமிழர் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்
X

தென்காசியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் 252 பயனாளிகளுக்கு ரூ.69 இலட்சத்து 22 ஆயிரத்து 913 மதிப்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தர ராஜ் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் பேசியதாவது:- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் அரசாக திகழ்கிறது. தமிழகத்தில் எங்கெல்லாம் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளதோ அங்கெல்லாம் அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் 66 பயனாளிகளுக்கு அவர்களுக்கு தேவையான இலவச எரிவாயு இணைப்பு, இலவச அடுப்பு, இலவச ஆணைகள் மற்றும் இலவச சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கடந்த இரு தினங்களாக கோவை மற்றும் திருப்பூரில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மேலும் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களுக்கு அறிவிக்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் அவர்களுக்கு சென்றடையும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் 252 பயனாளிகளுக்கு 69இலட்சத்து 22ஆயிரத்து 913 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 66 பயனாளிகளுக்கு தலா ரூ.6,758 மதிப்பில் விலையில்லா எரிவாயு இணைப்பு, இலவச அடுப்பு, இலவச ஆடைகள் மற்றும் இலவச சமையல் பாத்திரங்கள் என மொத்தம் 4 இலட்சத்து 46,028 மதிப்பிலும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 96 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இந்திரா காந்தி விதவை உதவித்தொகை என வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான ஆணைகளையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ.97,500 மதிப்பில் இயற்கை மரணம், இறப்பு மற்றும் ஈமக்கிரியை உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையினையும்;, மேலும் 3 பயனாளிகளுக்கு ரூ.69 ,770 மதிப்பில் ஆக்கிரமிப்பை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கான ஆணைகளையும்.

வேளாண்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தேசிய உணவுப்பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ரூ.7,650 மதிப்பில் தொகுப்புத்திடல், தரிசு நில மேம்பாடுதிட்டத்தின் கீழ் ரூ.13,400 மதிப்பில் பின்னேற்பு மானியம், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.13,054 மதிப்பில் தெளிப்பு நீர் பாசன கருவி, நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் ரூ.28,101 மதிப்பில் மழைத்தூவான் கருவி மற்றும் ரூ.4000 மதிப்பில் தென்னை மரம் ஏறும் கருவி என மொத்தம் ரூ.66,205 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம்-2021-2022 திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு புதிய வீடு கட்டுவதற்காக ரூ.34இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு திசு வாழை, நிரந்தர பந்தல், மினி டிராக்டர், நறுமணப்பயிர்கள் மற்றும் வெங்காய பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ.2இலட்சத்து 19,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.25 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1இலட்சத்து 23 ஆயிரத்து 910 மதிப்பில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸகூட்டர்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.1இலட்சத்து 19ஆயிரத்து 616 மதிப்பில் இலவச தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்புப் பெட்டிகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிநாடார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, ஒன்றிய குழுத்தலைவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Nov 2021 4:09 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...