/* */

மாவட்ட ஊராட்சியில் ரூ.2 கோடி மோசடி: தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாக்குவாதம்

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் சுமார் 2 கோடிக்கு மேல் மோசடி செய்து தலைவி தன்னிச்சையாக செயல்படுவதாக புகார்

HIGHLIGHTS

மாவட்ட ஊராட்சியில் ரூ.2 கோடி மோசடி: தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாக்குவாதம்
X

தென்காசி மாவட்டம் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைவி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி உறுப்பினர்களிடையே வாக்குவாதம் நடந்தது.

தென்காசி மாவட்டத்த்தில் கடந்த 12.01.2022 ம் தேதி நடந்த மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடம் ஏழு மன்ற பொருளை வைத்து ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், தற்போது 13 ஆக மாற்றப்பட்டுள்ளதாகவும் சுமார் 6 மன்றப்பொருட்கள் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டை தலைவி தவறாக தன்னிச்சையாக சுமார் 1.5 கோடி மாநில அரசின் நிதி மோசடியாக ஒதுக்கீடு செய்ததாககூறி இன்றைய கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

14 பேர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திமுக, காங்கிரஸ் சேர்ந்தவர் உள்ள நிலையில், நேற்றைய கூட்டம் நடைபெற்றது. மாநில அரசின் நிதியில் முறை கேடு நடந்ததாக கூறி அவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கூறியும் மேலும் மாநில அரசின் மூலம் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி நிதி குறித்த தகவல் தற்போது வரை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என ஒரு சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தலைவி கேள்விகளுக்கு பதில் சொல்லாத நிலையில் எழுந்து சென்றார் கூட்டம் பாதியில் முடிந்தது. திமுக தரப்பு தலைவியே மோசடியில் ஈடுபட்டதாக அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 March 2022 2:30 AM GMT

Related News