/* */

சபரிமலை 18ம் படியில் மேற்கூரை அமைக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு

சபரிமலை 18ம் படியில் மேற்கூரை அமைக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு
X

சபரிமலையில் பதினெட்டாம் படியில் மேற்கூரை அமைக்கும் பணிக்காக அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

தமிழகத்தில் முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் கேரள மாநிலத்தில் ஐயப்பனுக்கு, அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, தர்ம சாஸ்தா கோவில், சபரிமலை, காந்தமலை என ஆறு இடங்களில் கோவில்கள் அமைந்துள்ளது அதில் ஐயப்பன் கோயில்களில் முதன்மையானது சபரிமலை. இங்கு கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலையிட்டு விரதம் இருந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.

இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான பொது சுகாதாரம் , கழிப்பறை உள்ளிட்ட தேவைகளை கேரள அரசு செய்து வருகிறது.

மேலும் பக்தர்களின் வசதிகளுக்காக பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது அதன் அடிப்படையில் மண்டல பூஜை துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டு படிகளின் மேல் கூரை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளது.

இதற்காக பக்தர்கள் செல்லும் பாதையான கரிமலை, நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம் சரங்குத்தி,, சன்னிதானம் ஆகிய இடங்களில் நிபுணர்கள்அதிகாரப்பூர்வ ஆய்வு மேற்கொண்டனர். பம்பை முதல் சன்னிதானம் வரையிலான கட்டுமானப் பணிகளை ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அரவணா ஆலை, பெய்லி பாலம், மை கிணறுகள், பல்வேறு துறைகளின் உற்பத்தி அமைப்புகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வுகளில் பேரிடர் மேலாண்மை துணை ஆட்சியர் டி.ஜி.கோபகுமார், அடூர் ஆர்டிஓ துளசிதரன் பிள்ளை, மாவட்ட தகவல் அலுவலர் ஸ்ரீகாந்த் எம்.கிரிநாத், தேவசம்போர்டு உதவிப் பொறியாளர் ஜி.மனோஜ்குமார் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Nov 2023 2:51 AM GMT

Related News