/* */

நாய்களுக்கான வெறிநாய் கடி தடுப்பூசி முகாம்

நாய்களுக்கான  வெறிநாய் கடி தடுப்பூசி முகாம்
X

சுரண்டையில் நாய்களுக்கான வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் அதிகளவு பெருகி வருவதாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் வெறிநாய்களுக்கான தடுப்பூசி போடவும் பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சுரண்டை கால்நடை மருத்துவமனையில் அதற்கான முகாம் நடந்தது ‌.

இந்த முகாமிற்கு சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார், பேரூராட்சி சுகாதார மேற்ப்பார்வையாளர்கள் ஜெயபிரகாஷ், ராமர், அலுவலர்கள் சசிகுமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் 55 வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு கால்நடைகள் மருத்துவ இணை இயக்குனர் முகமது ஹாலில், உதவி இயக்குநர் வெங்கட்ராமன் ஆலோசனையின் பேரில் உதவி மருத்துவர் அசன் ஹாசிம், ஆய்வாளர் செய்யது இப்ராஹீம் ஹாசீம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமையா ஆகியோர் அடங்கிய குழுவினருக்கு ‌‌‌‌‌‌தடுப்பூசி போட்டு மாத்திரை வழங்கினர்.

Updated On: 22 April 2021 6:00 AM GMT

Related News