/* */

சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு..!

பிரானூர் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு..!
X

சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரானூர் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரானூர் ஊராட்சியில் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவை சேர்ந்தவர் இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யாமல் துணைத் தலைவர் வணிக நிறுவனங்கள் ஹோட்டல்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்.

எனவே எங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து சில நாட்களுக்கு முன் ஊர் பொதுமக்கள் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் வந்து சமரசம் பேசியதால் கலைந்து சென்றனர்.

தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனு அளித்துள்ளனர். அதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்களுக்கு சரிவர தண்ணீர் வழங்காத தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரையும் நிர்வாகத்தையும் கண்டித்து திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ வருகை தந்து நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் குடிநீர் விநியோகம் சீராக வழங்க பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடிநீர் சீராக வழங்கப்படும் என்று உறுதி அழிக்கப்பட்டதால் பொதுமக்கள் அமைதியாக சென்றனர்.

Updated On: 20 April 2024 3:08 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!