/* */

தென்காசி அருகே புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக குடியிருப்பு திறப்பு

Tenkasi District News -தென்காசி அருகே புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக குடியிருப்பினை பழனி நாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசி அருகே புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக குடியிருப்பு திறப்பு
X

புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலக குடியிருப்பு கட்டிடத்தை தனுஷ் குமார் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் திறந்து வைத்தனர். 

Tenkasi District News -பாவூர் சத்திரம் அருகே ரூ. 20 லட்சம் மதிப்பிலான வருவாய் ஆய்வாளர் அலுவலக குடியிருப்பை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணியில் இயங்கி வந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக குடியிருப்பு மோசமான நிலையில் இருந்தது. இடிந்து விழும் நிலையில் கட்டிடம் இருந்ததால் உள்ளே செல்லவே மக்கள் அச்சப்பட்டனர். இதனால் வருவாய் அலுவலரிடம் சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் வாங்குவதற்கு கூட மக்கள் செல்ல முடியாமல் தவித்தனர்.

எனவே அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் வேண்டுமெனஅப்பகுதி மக்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து சுமார் 20 லட்சம் மதிப்பிலான வருவாய் ஆய்வாளர் அலுவலக குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காவேரி சீனித்துரை தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி முன்னிலை வைத்தார்

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் , சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் புதிய வருவாய் அலுவலர் குடியிருப்பினை திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அதன் அருகில் உள்ள அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழையின் போது தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் மேற்கூரை சிதலமடைந்து கீழே விழுந்த தகவல் அறிந்து அந்தப் பகுதியினை நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தி.மு.க.மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

விரைவில் கட்டிடத்தை முழுமையாக இழுத்து விட்டு மாவட்ட பஞ்சாயத்து, அல்லது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, போன்று ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வில் ஈடுபட்ட போது அந்த பகுதி மக்களிடம் எம்பி மற்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் எஸ். ஆர் சுப்பிரமணியன், சாக்ரடீஸ், கீழப்பாவூர் காங்கிரஸ் நகர தலைவர் சிங்கக்குட்டி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனித்துரை, விஜயன், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தேவேந்திரன், பிரபாகரன், அரவிந்த், பிரபாகர் உட்பட தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 7:20 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!