/* */

சுந்தரபாண்டியபுரம் பகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சுந்தரபாண்டிபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

சுந்தரபாண்டியபுரம் பகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

சுந்தரபாண்டியபுரம் பகுதியில் திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் பிரதானத் தொழிலாக விவசாயம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல், கத்தரி, வெண்டை, போன்ற காய்கறி வகைகள், சிறு கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள், உளுந்து, பாசிப்பயிறு, நிலக்கடலை போன்ற பயிர் வகைகள் ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுந்தரபாண்டிபுரம், பாட்டா குறிச்சி, திருச்சிற்றம்பலம், தட்டாங்குளம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தற்போது 1500 ஹெக்டேர் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது விவசாயிகள் அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் சமுதாய நல கூடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை தென்காசி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தொடங்கி வைத்தார். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து தினமும் 1000 மூட்டைகளை கொள்முதல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கொள்முதல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், போரூர் கழகச் செயலாளர் பண்டாரம் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Updated On: 9 March 2023 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...